பல வகையான நாய்கள் இருந்தாலும் ஹஸ்கி வகை நாய்கள் மிகவும் அழகானவை. இவற்றை பலரும் ரசிப்பதோடு, தனது வீடுகளில் வளர்க்கவும் செய்கின்றனர். இந்த செல்ல பிராணியின் பலவித புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் ஏராளமாக கொட்டி கிடக்கின்றன. இவற்றில் சில வைரலானவையும் கூட. இந்த வகை ஹஸ்கி நாய்களுக்கு பின்னால் பிரபலமான வரலாறு ஒளிந்துள்ளது. இந்த வரலாறு பற்றியும் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பயணத்திற்கான விலங்கு : ஹஸ்கி நாய்கள் சுச்சி மக்களால் ஸ்லெட் நாய்களாக வளர்க்கப்பட்டன. அதாவது பனி பிரதேசத்தில் பயணத்திற்காக இந்த நாய்களை பயன்படுத்தி வந்தனர். இந்த பழங்குடியினர் வடகிழக்கு ஆசியாவின் சைபீரிய தீபகற்பத்தில் வாழ்கின்றனர். அதிகபட்சம் 20 ஹஸ்கி நாய்கள் கொண்ட குழு ஸ்லெட்களை இழுக்கும், பின்னர் அவர்கள் அனைவரும் உணவைத் தேடுவார்கள். சுச்சிகள் உயிர் பிழைப்பதற்காக இந்த வகை ஹஸ்கி நாய்களை நம்பியிருந்தனர். அதே போன்று சுச்சி மக்களின் நம்பிக்கையின்படி, நாய்களுக்கு அநியாயம் செய்யும் கொடூரமான மனிதர்களை சொர்க்கத்தின் வாசலில் இருந்து எதிர்க்கும் காவலர்கள் ஹஸ்கி நாய்கள் என்று நம்பப்பட்டு வருகிறது.
புகழ்பெற தொடங்கியது : 1925 ஆம் ஆண்டில் அலாஸ்காவில் டிப்தீரியா தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஒரு உயிர்காக்கும் சீரமை கொண்டு வந்த பிறகு ஹஸ்கி நாய்கள் மிகவும் பிரபலமாகி விட்டன. அப்போது அது 600 மைல் தொலைவில் இருந்தது மற்றும் அந்த நேரத்தின் வானிலை மிக மோசமாக இருந்தன. அந்த சமயத்தில், 100 ஹஸ்கி நாய்கள் மற்றும் 20 ஸ்லெட் டிரைவர்கள் கொண்ட குழுவின் உதவியோடு, சரியான நேரத்தில் அந்த மருந்தை பெற போராடினார்கள். இதனால் தான் ஹஸ்கி நாய்கள் அதிகம் புகழ்பெற தொடங்கியது.
செல்ல பிராணிகள் : ஹஸ்கி நாய்கள், குறிப்பாக சைபீரியன் இனங்கள், செல்லப்பிராணிகளாக வளர்வதற்கு மிகவும் சவாலானவையாக இருந்தன. ஹஸ்கி நாய்களின் டிஎன்ஏ படி அவை நீண்ட தூரம் ஓட வேண்டும் என்பதை விரும்ப கூடியவை. எனவே அவற்றை செல்லப்பிராணிகளாக வைத்திருந்தால், அதை வளர்ப்பதில் அதிக சிரமம் ஆரம்ப காலத்தில் உண்டாகும். இன்று வரை ஹஸ்கி நாய்களை வளர்ப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்று சொல்கின்றனர்.
சுத்தமானவை : ஹஸ்கி நாய்கள் பொதுவாக மிகவும் சுத்தமாக இருக்கும். அவற்றின் அடர்த்தியான முடி அவை குளிர்ந்த காலநிலையில் செழித்து வளர உதவுகிறது. அவை பனி நிறைந்த வாழ்விடத்தில் வாழ்ந்து வந்தால், அவற்றிற்கு டிரிம்மிங் தேவையில்லை. ஹஸ்கி நாய்களின் முடி தானாகவே வருடத்திற்கு ஒரு முறை உதிர்கின்றன, ஆனால் நீங்கள் அவற்றை தொடர்ந்து குளிப்பாட்டினால், இந்த உதிர்தல் குறைந்து விடும்.
புது தகவல் : இந்த தகவல் பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். சைபீரியன் ஹஸ்கி கிளப் ஆஃப் அமெரிக்கா என்கிற அமைப்பின், சைபீரியன் ஹஸ்கி நாய்களுக்கான தேசிய கிளப்பில், ஹஸ்கி நாய்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்கிற மூன்று நிலைகளை குறித்த திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பிரிண்ட் மற்றும் தொலைதூர பந்தயங்கள் உள்ள அணிகளுடன் அவை போட்டியிட வேண்டும். இதை பொறுத்து அவற்றின் தகுதி நிலைகள் நிர்ணயிக்கப்படும்.