மனிதர்களிடம் பல்வேறு பண்புகள் உள்ளன. நற்பண்புகள் மற்றும் தீய பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை நம்மால் கணக்கிட முடியும். பிறருக்கு உதவுதல், மற்றவர்களுடம் பகிர்ந்து கொள்ளுதல், அன்பாக பழகுதல், விட்டுக்கொடுத்தல், எளிதாக கடந்து செல்லுதல் போன்றவற்றை நற்பண்புகளாக கருதுவோம். இதற்கு மாறாக பொறாமை குணம், சுயநலமாக இருத்தல், அதிக கோபம், பிறரை மதிக்காமல் இருத்தல் போன்றவற்றை தீய பண்புகளாக கூறுவோம். இந்த தீய குணத்தில் மிகவும் ஆபத்தானது சுயநலமிக்க மனிதராக இருப்பது தான். நம்மை சுற்றியே பல சுயநல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை கண்டறிவது எப்படி என்பதை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.
வாக்குறுதிகள் : சுயநலமாக இருப்பவர்கள் பொதுவாகவே தாங்கள் கூறும் எந்த வாக்குறுதிகளையும் பின்பற்ற மாட்டார்கள். எப்போதும் போலியான வாக்குறுதிகளை மட்டுமே பிறரிடம் சொல்வார்கள். இது போன்றவர்களுக்கு ஒருவருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எந்த வகையிலும் காப்பாற்றவே தெரியாது. மேலும் இந்த சுயநலமிகள் உங்களை ஏமாற்றவும் செய்வார்கள்.
கைவிடுதல் : நமக்கு அருகில் உள்ளவர்களை எப்போதும் நாம் எந்த நிலையில் கைவிடாமல் இருத்தல் வேண்டும். ஆனால், சுயநலம் கொண்டவர்கள் பிறரை பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டார்கள். மேலும் இக்கட்டான சூழலில் கூட ஒருவரை கைவிட்டு சென்று விடுவார்கள். இவர்களை போன்றவர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
சுய நலம் : பொதுவாக சுயநலம் எண்ணம் கொண்டவர்கள் எந்த வகையிலும் மனதளவிலும், நட்பின் பேரிலும் மனிதர்களிடம் இணைப்பில் இருக்க மாட்டார்கள். மற்றவர்களை போன்று முக்கியமான உறவுகளை ஏற்படுத்தி கொள்ளாமல் இருப்பர். இதை வைத்தே அவர்களை எளிதில் அறிய முடியும். இத்துடன் அவர்களுக்கு வேண்டியதை மட்டும் சுயநலத்துடன் உங்களிடம் இருந்து பெற்று கொள்வார்கள்.
பெருமிதம் : சுயநலத்துடன் இருக்கும் நபர்கள் எப்போதும் தன்னை மட்டுமே நிலை நிறுத்த ஆசைப்படுவார்கள். மேலும் இந்த குணம் கொண்டவர்கள் பொறாமை கொண்டவர்களாகவும் இருப்பர். தன்னை சுற்றி உள்ள எல்லோரும் தன் மீது மட்டுமே கவனம் தரும்படி நடந்து கொள்வார்கள். இப்படிப்பட்டர்கள் உண்மையில் மோசமான மனிதர்கள். இவர்களை உங்கள் நட்பு வட்டாரத்தில் சேர்த்திருந்தால் விரைவில் அவரை விட்டு விலகி விடுங்கள். இல்லையேல் மற்றவர்களின் நிம்மதியையும் பறித்து விடுவார்கள்.
பொறாமை : தன்னை விட இன்னொருவர் சிறப்பாக செயல்பட்டால் அதை பொறுத்து கொள்ள முடியாமல் எப்படியாவது அதை சீரழிக்க வேண்டும் என்று சுயநலமிகள் நினைப்பார்கள். மேலும் இதனால் உங்களிடம் கொடூரமாக நடந்து கொள்வார்கள். எந்தவித உழைப்பும் இன்றி வெறும் சுயநலத்தால் மட்டுமே எளிதில் உயர்ந்திட வேண்டும் என்கிற எண்ணம் இவர்களுக்கு எப்போதும் உண்டு. மேற்சொன்ன பண்புகள் கொண்டவர்களிடம் இருந்து, தள்ளி இருப்பது நல்லது.