கே.ஜி.எஃப் படம் மூலம் கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்த யாஷ் தற்போது பான் இந்தியா ஸ்டாராக அசத்தி வருகிறார். கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து ரசிகர்களும் யாஷ் நடிப்பிற்கு அடுத்தபடியாக கண்டு வியக்கும் மற்றொரு விஷயம் அவருடைய கட்டுமஸ்தான உடல் தோற்றத்தைத் தான். உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் இளைஞர்கள் பலருக்கும் யாஷ் ரோல் மாடலாக மாறியுள்ளார். நடிகர் யாஷின் பிட்னஸ் சீக்ரெட் இதோ...
1. மிரளவைக்கும் யாஷின் மாஸ் லுக்: கே.ஜி.எஃப் படத்தில் யாஷ் உச்சகட்ட புகழ் அடைய, மாஸ் ஹீரோவுக்கே உரித்தான கட்டுமஸ்தான உடல் தோற்றம் மிகவும் உதவியது. தற்போது கே.ஜி.எஃப் 2 படத்திலும் தன்னுடைய உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க யாஷ் பல்வேறு உடற்பயிற்சிகள் மற்றும் உணவுப் பழக்கத்தை பின்பற்றியிருக்கிறார்.