வெயில்காலங்களை விட க்காலத்தில் முகம் அதிக எண்ணெய் பிசுபிசுப்புடன் பொலிவிழந்து காணப்படும் என்பதால் சன்ஸ்கீரின் உபயோகிப்பது, மேக் அப்போடுவதைத் தவிர்ப்பது, உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது போன்ற சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். இது உங்களது முகம் பளபளப்புடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.பொதுவாக சரும பிரச்சனைகள் வெயில் காலத்தில் அதிகளவில் இருக்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்போம். கோடை காலத்தைக் கூட சமாளித்து விடலாம் ஆனால் பருவ மழைக்காலங்களில் ஏற்படும் சரும பிரச்சனையை சரிசெய்வது என்பது அனைவருக்கும் சவாலான விஷயமாக இருக்கும். மழைக்காலங்களில் முகத்தில் அதிக எண்ணெய் பிசு சேர்வதால், பருக்கள் அதிகமாகி முகத்தினை அழகை கெடுக்கிறது. எனவே இது போன்ற நேரங்களில் எவ்வித இடர்பாடும் இல்லாமல் முகத்தை எப்படி அழகாக பராமரிப்பது என்பது குறித்து இங்கே நாமும் தெரிந்து கொள்வோம்..
மேக் அப் போடுவதைத் தவிர்த்தல்:மழைக்காலங்களில் அதிக மேக் போடும் போது சருமத்தில் உள்ள துளைகள் அடைப்பட்டு முகப்பருகள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை நீங்கள் மேக்- அப் போட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும் என்றால் பவுண்டேசன் அல்லது கிரீம்களைப் பயன்படுத்த வேண்டாம். நிச்சயம் மழை பெய்தால் அனைத்து கரைந்துவிடும். எனவே தண்ணீரில் கரையாத பவுண்டேஷன்களாகப் பயன்படுத்தலாம். கொஞ்சம் பவுடர் மற்றும் பருவக்காலத்தில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு தோலில் நீர் இழப்பு மற்றும் பருக்கள் போன்றவை வருவதை தவிர்க்கிறது.
ஜெல் போன்ற சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துதல்: மழைக்காலங்களில் சூரிய ஒளி அதிகம் இருக்காது. இதனால் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நினைப்பது தவறான கருத்து. இந்த காலங்களில் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களால் உங்களது சருமத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே மழைக்காலங்களில் வெளியில் செல்வதற்குமுன்னதாக ஜெல் போன்ற சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். நிச்சயம் இது உங்களது பாதுகாப்பான மற்றும் சரும பராமரிப்பிற்கு உதவியாக இருக்கும்.
எக்ஸ்ஃபோலியேட்:மழைக்காலங்களில் சருமத்தில் அதிக மாசுக்கள் சேர்வதால் பல பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது. குறிப்பாக சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீங்கள் அகற்றாவிடில் புதிய செல்கள் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.. இதனால் சருமத்திற்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல் முகத்தில் பருக்கள் மற்றும் கருமை ஏற்படுகிறது. எனவே சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்கை அகற்றுவதற்கு கிரீன் டீ, சர்க்கரை அல்லது தயிர் போன்றவை வைத்து எக்ஸ்போலிடியேட் அதவாது மசாஜ் செய்வதன் மூலம் இதை தடுக்கலாம்.
ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல் : வெயில் காலம், பருவ மழைக்காலம் என எந்த சூழலுக்கும் உங்களது முகத்தை நீங்கள் பளபளப்பாக வைத்திருக்க விரும்பினால் உணவு முறையில் நிச்சயம் மாற்றம் தேவை. பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் உட்கொள்வது உங்களது சருமத்தை எப்போதும் இயற்கையான அழகோடு வைத்திருக்க உதவும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் எவ்வித உடல் பிரச்சனைகளுக்கும் ஏற்பட வாய்ப்பில்லை.