முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

நம் தசைகளை வலுப்படுத்தும் வகையில் மிதமான அல்லது தீவிரமான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும்.

 • 18

  வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

  நம் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமானது. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக வயோதிகம் சார்ந்த நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி நமது ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

  ஆனால், எல்லோருக்கும் தினசரி உடற்பயிற்சி செய்வதற்கான கால அவகாசம் கிடைக்கிறதா என்ன? பெரும்பாலான மக்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் அலுவலகம் சென்று பணிபுரிந்து வீடு திரும்புவதற்கு எடுத்துக் கொள்கின்றனர். மீதமுள்ள நேரத்தில் 8 மணி நேர தூக்கம் அவசியமாகும். எஞ்சியுள்ள 4 மணி நேரத்தில் தான் குளிப்பது, சாப்பிடுவது உள்பட அன்றாட கடமைகளையும், தனிப்பட்ட வேலைகளையும் செய்து கொள்ள வேண்டியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 38

  வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

  ஆக, வார நாட்களில் ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்பு குறைந்து விடுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் வார இறுதியில் வரும் விடுமுறை நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் வாரத்தில் 2 நாட்கள் முறையாக உடற்பயிற்சி செய்தாலும் கூட நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 48

  வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

  எந்தெந்த வயதினருக்கு எவ்வளவு நேரம் பயிற்சி தேவை? : ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை உலக சுகாதார மையம் வரையறை செய்துள்ளது. அதன்படி 18 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் வாரத்தில் 150 மணி நேரம் முதல் 300 மணி நேரம் வரை மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 58

  வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

  இந்த கால அளவை இரண்டாக பிரித்து கொள்ளலாம். அதாவது 75 மணி நேரம் முதல் 150 மணி நேர அளவுக்கு ஓட்டம், நீச்சல் போன்ற கடினமான பயிற்சிகளையும், எஞ்சியுள்ள நேரத்தில் நடைபயிற்சி, ஜாக்கிங் போன்ற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 68

  வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

  தசைகளை வலுப்படுத்த வேண்டும் : நம் தசைகளை வலுப்படுத்தும் வகையில் மிதமான அல்லது தீவிரமான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும். குறைந்தப்பட்சம் வாரத்திற்கு இரண்டு முறையாவது எடை தூக்குதல் பயிற்சி செய்வது அவசியம். டிரைசெப், பைசெப் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 78

  வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

  வார இறுதி நாட்களில் : உடற்பயிற்சிக்காக நீங்கள் ஒதுக்கும் வார இறுதி நாட்களில் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் பயிற்சி செய்யலாம். தொடர்ச்சியான உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் போதுமான ஓய்வு போன்றவை இருந்தால் நம் உடலுக்கு அபாரமான பலன்கள் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 88

  வார இறுதி நாட்களில் மட்டும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதா?

  ஒரே இடத்தில் அமரக் கூடாது : நாம் இன்றைக்கு அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்யும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதை தவிர்க்க முடியாது என்றாலும் அவ்வபோது எழுந்து, நடந்து சென்று வருவது முக்கியம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது நல்லதல்ல என்று உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. இறுதியாக ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த பயிற்சியுமே செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் ஏதோ சில பயிற்சிகளை செய்வது நல்லது.

  MORE
  GALLERIES