குறையை வென்ற சாதனைப் பெண்... நீளம் தாண்டுதல், பளு தூக்குதல், பாடிபிட்லர் என பன்முகம் கொண்ட மாற்றுத்திறனாளி
யாருக்கும் கிடைக்காத ஊன்றுகோள் என் கையில் இறுக்கமாக உள்ளது. நான் ஒருபோதும் தவற விட மாட்டேன்- குய் யூனா
Web Desk | January 8, 2021, 2:35 PM IST
1/ 21
பாராலிம்பிக்கில் நீளம் தாண்டுதலில் போட்டியிட்ட குய் யூனா, உடற் கட்டமைப்பிற்கு முதல் முதலில் பயிற்சி பெற்று கலந்துகொண்டார். ஆனால் அக்டோபரில் அவர் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்..
2/ 21
ஏழு வயதில் நடந்த சாலை விபத்தில் தனது வலது காலை இழந்தார்.
3/ 21
டிசம்பர் 11, 2020 அன்று பெய்ஜிங்கில் நடந்த சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பில் (IWF) கலந்துகொண்ட போது மற்ற போட்டியாளர்களுடன் பாடிபில்டர் குய் யூனா மேடையில் நின்ற புகைப்படம்.
4/ 21
But they would not dare do that now -- the 35-year-old is a prize-winning bodybuilder and former Paralympian whose inspirational story has gone viral in China.ஆனால் அவர்கள் முன்னாள் பாராலிம்பியனான குய் யூனா 35 வயதில்தான் பாடிபில்டர் ஆனார் . இவரின் கதை சீனாவில் பலருக்கும் தூண்டுகோலாக மாறியது.
5/ 21
மேடையில் நின்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட போது...
6/ 21
குய் யூனா
7/ 21
மாற்றுத்திறனாளிகளை பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் அவரது உறுதியான நம்பிக்கையுடனும் நேர்மறையான அணுகுமுறையுடனும் பலரையும் ஈர்க்க வைத்தது.
8/ 21
"நான் முதல் இடத்தை வென்றது எனது தொழில்முறை அல்லது தசைகள் காரணமாக அல்ல, மேடையில் நின்று அனைவருக்கும் என்னைக் காண்பிப்பதற்கான எனது நம்பிக்கையும் துணிச்சலும் காரணமாகவே" என்று குய் மேடையில் கூறினார்.
9/ 21
ஷாங்காய் ஜிம்மில் அவர் மேற்கொள்ளும் தீவிர பயிற்சிகளை டிக்டாக்கில் பகிர்வார். 200,000 மேற்பட்ட டிக்டாக் ஃபாலோவர்களைக் கொண்டிருக்கிறார்.
10/ 21
குய் யூனா மேடையில் பேசிய போது சிறு வயதில் தன்னை மூன்று கால் பூனை என கிண்டல் செய்வார்கள் என கண்ணீர் வடிக்கப் பேசியது அங்கிருந்த பார்வையாளர்களுக்கு மன வருத்ததை உண்டாக்கியது.
11/ 21
குய் யூனா பல இடங்களில் தகாத வார்த்தைகளைக் கேட்டிருப்பதாகவும், பல பேரால் உடல் ரீதியாக கொடுமைகளை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும் <strong>இரும்பால் தைக்கப்பட்டது என் இதயம்..எத்தனை முறை உதைத்தாலும் எழுந்து நின்று கொண்டே இருப்பேன்</strong> என பேசினார்.
12/ 21
குய் யூனா
13/ 21
குய் யூனா
14/ 21
சீனாவின் தெற்கு நகரமான நானிங்கைச் சேர்ந்த குய், அவரது தாயால் வளர்க்கப்பட்டார், ஏனெனில் அவர் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை இறந்துவிட்டார்.
15/ 21
பல முரண்பாடுகள் அவளுக்கு எதிராக அடுக்கி வைக்கப்பட்டன. இருப்பினும் குயினின் விளையாட்டுத் திறன் அவரது உறுதியுடன் பினைக்கப்பட்டிருந்தது. 2001 ஆம் ஆண்டில் அவர் பாராலிம்பிக் விளையாட்டுகளில் ஈடுபட்டார். 2004 விளையாட்டுப் போட்டிகளில் சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியதில் நீளம் தாண்டுதல் பிரிவில் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
16/ 21
குய் நீளம் தாண்டுதல் மட்டுமன்றி வில்வித்தை செய்யும் பயிற்சிகளையும் மேற்கொண்டு பல போட்டிகளில் பங்குபெற்றார். இப்படி பல வகைகளில் தன் விடா முயற்சிகளை முன்னெடுத்தார்.
17/ 21
2017 ஆம் ஆண்டில் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, குய் உழைக்கும் உலகில் இன்னும் கூடுதலான பாகுபாடுகளை எதிர்கொண்டார்.
18/ 21
அதன் பிறகுதான் அவர் பாடிபில்டிங் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
19/ 21
எப்போதாவது சிலர் குயினிடம் உன் வலது காலுக்கு என்ன ஆனது என்று கேட்டு சங்கடப்படுத்துவதை நினைத்து வருத்தப்படிருக்கிறார். பின்னாளில் இந்த உலகம் இல்லாததைதானே எதிர்பார்க்கும் என நினைத்து அந்த கேள்விக்கு தன்னைபழக்கப்படுத்திக்கொண்டார்.
20/ 21
யாருக்கும் கிடைக்காத ஊன்றுகோள் என் கையில் இறுக்கமாக உள்ளது. நான் ஒருபோதும் தவற விட மாட்டேன்- குய் யூனா
21/ 21
"விதி எனக்கு இரக்கமற்றது என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை," என்று குய் கூறியுள்ளார். ஆரம்பத்தில் பலரால் நிராகரிப்பட்ட குய் தன் விடாப்பிடி முயற்சிகளால் இன்று வீட்டு அலங்காரத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனத்தில் பார்ட்னராக உள்ளார்.