முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பாசிடிவ் எண்ணம், செயல், விடாமுயற்சி... பிடித்த வேலையை பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

பாசிடிவ் எண்ணம், செயல், விடாமுயற்சி... பிடித்த வேலையை பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

Tips to get dream Jobs : உங்களுக்கு பிடித்த வேலையை எளிதில் மன நம்பிக்கையோட தேட சில காரியங்களை பின்பற்றினால் போதும்.

  • 18

    பாசிடிவ் எண்ணம், செயல், விடாமுயற்சி... பிடித்த வேலையை பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

    பிடித்த வேலையை மனமாற செய்ய வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது. அப்படி ஒரு பிடித்த வேலையை சரியான நேரத்தில் பெறுவது என்பது தற்போதைய காலத்தில் கடினமாகவே இருக்கிறது. இதன் மத்தியில் பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 28

    பாசிடிவ் எண்ணம், செயல், விடாமுயற்சி... பிடித்த வேலையை பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

    இதோடு மட்டுமின்றி இளம் வயதில் இருந்தே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். நான் திறமையான அதிகாரியாக ஆக வேண்டும், மருத்துவராக ஆக வேண்டும் என பல கனவுகள் இருக்கும். இவற்றையெல்லாம் நீங்கள் அடைய வேண்டும் என்றால், பாசிடிவ் எண்ணம், செயல் மற்றும் விடாமுயற்சி ஆகியவை தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதோ பிடித்த வேலையைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த சில டிப்ஸ்கள் இங்கே தெரிந்துகொள்ளவோம்.

    MORE
    GALLERIES

  • 38

    பாசிடிவ் எண்ணம், செயல், விடாமுயற்சி... பிடித்த வேலையை பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

    விரும்பிய வேலையை அடையாளம் காணுதல்: குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் படித்த படிப்பிற்கான வேலை அல்லது பிடித்த வேலையைத் தேட முயற்சி செய்யுங்கள். இதோடு விரும்பிய சம்பளம், பிடித்த வேலை என்பதோடு எந்த இடத்தில் அதாவது ஊரில் பணிபுரிந்தால் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்பதையும் தேர்வு செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 48

    பாசிடிவ் எண்ணம், செயல், விடாமுயற்சி... பிடித்த வேலையை பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

    கனவு காணுதல்: ஒவ்வொருவரும் வேலைக்கிடைப்பதற்கு முன்னதாக, பிடித்த வேலைக் கிடைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? எப்படியெல்லாம் திறமையின் மூலம் முன்னேற்றத்தை அடையலாம் என நினைத்து கனவு காண்போம். நீங்கள் என்ன கனவு கண்டீர்களோ? அதை உங்களது பணியில் செய்ய முயலுங்கள். நிச்சயம் எந்த இடையூறுகள் வந்தாலும் உங்களால் வெற்றி காண முடியும்.

    MORE
    GALLERIES

  • 58

    பாசிடிவ் எண்ணம், செயல், விடாமுயற்சி... பிடித்த வேலையை பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

    நேர்மறையான மனநிலையை உருவாக்குங்கள்: இன்றைக்கு ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். உங்களுக்கு எந்த வேலையை செய்தால் நன்றாக இருக்கும் என்றும், அதன் மேல் ஆசைகள் இருந்தால் அதை வெளிப்படுத்த முயலுங்கள். வேலைக்கான தேடல்கள் மற்றும் பணிகளை செய்யுங்கள்.

    MORE
    GALLERIES

  • 68

    பாசிடிவ் எண்ணம், செயல், விடாமுயற்சி... பிடித்த வேலையை பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

    செயல்முறைப்படுத்துதல்: நீங்கள் உங்களுக்கான வேலை வாய்ப்புகளைத் தேட வேண்டும். எந்த துறையில் நீங்கள் வேலைக்குச் செல்ல விரும்புகிறீர்களோ? அத்துறையில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். என்ன தேவை? என்பதைத் தெரிந்துக்கொண்டு உங்களுடைய வேலைக்கான விண்ணப்பங்களுடன் நேர்காணலுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 78

    பாசிடிவ் எண்ணம், செயல், விடாமுயற்சி... பிடித்த வேலையை பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

    விடாப்பிடியாக இருத்தல்: இன்னும் வேலை கிடைக்கவில்லையே? என்ற எண்ணத்தை இளைஞர்கள் முதலில் தூக்கி எறிய வேண்டும். ஒரு பாசிட்டிவ்வான அணுகுமுறை மற்றும் விடாமுயற்சியோடு உங்களது வேலையை நீங்கள் தேட வேண்டும். குறிப்பாக சரியான நேரத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கவும்.

    MORE
    GALLERIES

  • 88

    பாசிடிவ் எண்ணம், செயல், விடாமுயற்சி... பிடித்த வேலையை பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

    ஒருவேளை பல முறை முயற்சித்தும் உங்களது கனவு வேலை கிடைக்க வில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். தற்போது கிடைத்திருக்கும் வேலையை அக்கறையுடன் செய்வதோடு நன்றி தெரிவிக்கவும். இதுப்போன்ற வழிமுறைகளை நீங்கள் வாழ்க்கையில் பின்பற்றினாலே, நிச்சயம் உங்களுக்கான நல்ல வேலையை நீங்கள் பெற முடியும். சரியான நேரத்தில், சரியான வேலை கிடைக்கும் என்பதை மட்டும் நினைவில் வைத்து அதற்கான முயற்சியை மட்டும் எடுங்கள்.

    MORE
    GALLERIES