முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு அவர்களிடம் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய செயல்கள்.

 • 18

  குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  பெரியவர்களைப் போலக் கோபம், அதிருப்தி போன்றவற்றைக் கடந்து செல்லும் பக்குவம் குழந்தைகளுக்கு கிடையாது. ஆகவே நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 28

  குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  குழந்தைகள் அதிருப்தி அடையும்போது, முதலில் அவர்கள் தங்களை அமைதிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்க வேண்டும். குழந்தைகளுடன் எப்போதும் உடனிருங்கள். கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம். குழந்தைகள் அவர்களுடைய உணர்ச்சி மனநிலையிலிருந்து விடுபட உதவி செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 38

  குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  அதிருப்தி அடைந்துள்ள குழந்தைகள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கும் அதே சமயத்தில், அவர்களுக்கான எல்லைகளை நீங்கள் வரையறை செய்ய வேண்டும். குழந்தைகள் எல்லாவற்றையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அவர்களைக் கொஞ்சம் ஊக்கப்படுத்துங்கள்.

  MORE
  GALLERIES

 • 48

  குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  தன்னுடைய உலகில் குழந்தைகள் உங்களை அனுமதிக்கும்போது உடனடியாக வாதம் செய்யத் தொடங்க வேண்டாம். மாறாக, அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனிக்கவும். குழந்தை தனக்குள்ளேயே கோபத்தை அடக்கி வைத்திருக்கும் பட்சத்தில், அது நாளடைவில் மிக ஆபத்தான குணமாக மாறும்.

  MORE
  GALLERIES

 • 58

  குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  உங்கள் குழந்தை மீது எப்போதும் நம்பிக்கை வைக்கவும். ஆக, நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டீர்கள் என்று பொருளல்ல. உங்கள் குழந்தையின் மீது தவறு இருந்தாலும், சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு விட்டு விடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  உங்கள் குழந்தை அதிருப்தியாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு அறிவுறுத்த வேண்டாம். முடிந்தவரை அவர்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும்.

  MORE
  GALLERIES

 • 78

  குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  பெற்றோர் ஆவேசம் அடைவதைக் குழந்தைகள் விரும்புவதில்லை. ஆக, குழந்தையே அதிருப்தியாக இருந்தாலும் கூட, அவர்களது உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் நீங்கள் கோபத்தைக் காட்டாதீர்கள். அதேபோன்று பெற்றோர்கள் இடையே நடைபெறும் சண்டையைப் பார்த்து, குழந்தைகளும் அதே மனநிலையை வளர்த்துக் கொள்கின்றன.

  MORE
  GALLERIES

 • 88

  குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  குழந்தை கோபித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில் அவர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவர்கள் அமைதி அடைவார்கள். ஒருவேளை குழந்தை அதிருப்தியாக இருக்கும் சமயத்தில் நீங்கள் அவர்களைக் கண்டித்தீர்கள் என்றால், நாம் செய்தது தவறு என்பதே அவர்களுக்குப் புரியாமல் போய்விடும்.

  MORE
  GALLERIES