முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உடல் பிரச்னையை சொல்லும் நகம்.. உங்க நகம் இப்படி இருக்கா?

உடல் பிரச்னையை சொல்லும் நகம்.. உங்க நகம் இப்படி இருக்கா?

நகங்கள் உங்கள் ஆரோக்கியம் தொடர்பான பல தகவல்களை தருகின்றன.

  • 16

    உடல் பிரச்னையை சொல்லும் நகம்.. உங்க நகம் இப்படி இருக்கா?

    ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்கள் நகங்கள் மூலம் அறியப்படுகின்றன. அத்துடன், இவற்றை ஆன்மீகத்துடனும் இணைத்து பல தகவல் சொல்லப்படுகிறது. கையின் கோடுகளைப் போலவே, நகங்களில் உள்ள நிறம், புள்ளிகள் மற்றும் அவற்றின் நீளம், அகலம் ஆகியவை உங்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் பற்றி கூறும் என ஜோதிடம் கூறுகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    உடல் பிரச்னையை சொல்லும் நகம்.. உங்க நகம் இப்படி இருக்கா?

    சொத்தையான நகம் : யாருடைய நகங்கள் மஞ்சள் நிறமாக மாறுகிறதோ அல்லது விரைவாக உடைகிறதோ, அப்படிப்பட்டவரின் பாலுறவு திறன் குறையும் என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஆரோக்கிய ரீதியிலும் சிக்கம் என்பதே பொருல். மறுபுறம், நகங்கள் வளைந்த மற்றும் கோடுகளாக இருப்பவர்கள், பணம் தொடர்பான சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    MORE
    GALLERIES

  • 36

    உடல் பிரச்னையை சொல்லும் நகம்.. உங்க நகம் இப்படி இருக்கா?

    நகங்களில் வெள்ளை புள்ளிகள் : நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதுடன், எலும்பு பலவீனத்தையும் இது காட்டுகிறது . குறிபிட்ட வகை சத்து குறைவே இதற்கு காரணம். மன அழுத்தம் அதிகரிக்கும் போது இந்தப் புள்ளிகள் வந்து கொண்டே இருக்கும். மறுபுறம், யாருடைய நகங்களில் கருப்பு அல்லது மஞ்சள் புள்ளிகள் காணப்படுகின்றதோ, அவர்கள் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அது ஆரோக்கிய பலவீனத்தையும் காட்டுகிறது. நகங்களில் மஞ்சள் புள்ளிகள் இருந்தால், அது உங்கள் இரத்த பற்றாக்குறையைக் குறிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 46

    உடல் பிரச்னையை சொல்லும் நகம்.. உங்க நகம் இப்படி இருக்கா?

    பிரகாசமான சிவப்பு நிற நகம் : உங்களுடைய நகங்கள் சிவப்பு, பிரகாசமான மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறப்படுகிறது.  அதாவது மருத்துவ ரீதியாக ஆரோக்கியமான நபருக்கு இப்படியான நகங்கள் இருக்கும். அவர்களின் நகங்கள் சற்று நீண்டு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், அது அதிர்ஷ்டத்தின் குறிகாட்டியாக கருதப்படுகிறது. கட்டைவிரல் சிறியதை விட பெரியதாக இருக்க வேண்டும். மோதிர விரலை விட நடுவிரல் பெரிதாக இருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் நடுவிரலை விடவும், கட்டைவிரல் ஆள்காட்டி விரலின் நகத்தை விடவும் பெரிதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய நகங்களைக் கொண்டவர்களுக்கு கவலைகள் குறைவதோடு வெற்றிக்கான வழியையும் காணலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    உடல் பிரச்னையை சொல்லும் நகம்.. உங்க நகம் இப்படி இருக்கா?

    கோடுகளுடனுய நகம் : நகங்களில் நீண்ட மற்றும் செங்குத்து கோடுகள் இருந்தால், அது மூட்டு வலியைக் குறிக்கிறது. இந்த கோடுகள் கையால் தொடும்போது உணரப்படுகின்றன. இதனுடன், அவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்கின்றன. இல்லையெனில், நகங்கள் தடிமனாக இருந்தால், அது மூட்டுவலி, நீரிழிவு, நுரையீரல் தொற்று, அரிக்கும் தோலழற்சி போன்ற பிரச்சனைகளைக் குறிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 66

    உடல் பிரச்னையை சொல்லும் நகம்.. உங்க நகம் இப்படி இருக்கா?

    நகத்தின் விளிம்பில் ஒரு வெள்ளைக் கோடு : நகத்தின் விளிம்பில் ஒரு வெள்ளைக் கோடு அடிக்கடி தோன்றும், இந்த கோடு புரதக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். கூடுதலாக, இந்த வரி மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கல்லீரல் நோய் பற்றியும் கூறுகிறது. ஒரு நபரின் நகங்கள் ஆமையின் பின்புறம் போல நடுவில் இருந்து உயர்த்தப்பட்டு, அவற்றில் நீலம் அல்லது வெள்ளை அடையாளங்கள் இருந்தால், அது இதயம் தொடர்பான பிரச்சனையைக் குறிக்கிறது. நீல நகங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படுகின்றன. இது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

    MORE
    GALLERIES