ஜிம்மில் அல்லது டான்ஸ் ஃப்ளோரில் வியர்க்க விறுவிறுக்கப் பயிற்சி செய்து பிறகு, முகத்திலிருந்து எண்ணெய் கலந்த வியர்வை அதிக அளவில் வெளியாகும். இதனை ப்ளோட்டிங் ஷீட்களை பயன்படுத்திச் சுத்தப்படுத்தலாம். மற்றவர்களை விட எண்ணெய்ப் பசை அதிகமுள்ள சருமத்தைக் கொண்டவர்களின் மேக்கப்பை சிறப்பாகப் பாதுகாக்க ஆயில் ப்ளோட்டிங் ஷீட்கள் கிடைக்கின்றன.