ஆண் பெண் உறவுகளுக்குள் குறிப்பாக காதலர்கள் மற்றும் கணவன் மனைவியின் நெருக்கமான உறவுகளுக்குள் பொசசிவ்னஸ் மற்றும் இன்செக்யூரிட்டி என்ற பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள் அவ்வப்போது தலைதூக்கும். ஒரு பெண் மற்ற ஆண்களுடன் பேசினாலும் பழகினாலும் அதேபோல ஒரு ஆண் பிற பெண்களுடன் பேசும் போதும், அதிக கவனம் செலுத்தும் போதும் பாதுகாப்பின்மை அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் எதிர்பாலினத்தவருடன் நட்பாக பழகுவது பெரிய விஷயமே கிடையாது.
ஆனால், சில தருணங்களில் உங்களுக்கு கொடுக்கப்படுவதை விட வேறு ஒரு பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் தருவதை நீங்கள் தெரிந்து கொண்டால் வருத்தத்தை உண்டாக்கும். இத்தகைய நிலை உங்களுக்கு உறவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். உங்களுக்கு முக்கியத்துவமே இல்லையா என்று உணர வைக்கலாம். இத்தகைய சூழ்நிலையை நீங்கள் எளிதாக கடந்து செல்வதற்கான டிப்ஸ் இங்கே.
மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுங்கள் : எப்பொழுதுமே உறவுகளில் பிரச்சினை ஏற்படும் பொழுது அதை மனதுக்குள் வைத்து நீங்கள் நீண்ட காலம் குழப்பிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு தீர்வோ விளக்கமோ கிடைக்காது அல்லது தெளிவான முடிவுகளையும் எடுக்க முடியாது. எனவே நீங்கள் உணர்வு ரீதியாக காயப்பட்டிருந்தால் அதைப் பற்றி உங்கள் பார்ட்னர்ரிடம் வெளிப்படையாக தெரிவிக்கவும். மற்ற பெண்ணிடம் அதிகம் கவனம் செலுத்துவதைப் பற்றி நீங்கள் நேரடியாகவே உங்கள் பார்ட்னரிடம் கேட்கலாம்.
சரியான நேரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் : எந்த பிரச்சனையைப் பற்றி பேசுவதாக இருந்தாலும் சரி, இடம், பொருள், ஏவல் பார்த்து பேச வேண்டும். உங்கள் பார்ட்னருக்கு அதிக வேலை இருக்கும் போது இதை பற்றி பேசுவது சரியான தீர்வை அளிக்காது, மேலும் சிக்கலாக்கிவிடும். எனவே உங்களுடைய பாட்னர் ஜாலியாக இருக்கும் பொழுது அல்லது ஓய்வாக இருக்கும்போது இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் பேசலாம்.
தேவையில்லாத கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள் : ஆண் பெண் இருவருமே உறவுகளில் தங்களுக்கு ஏற்படும் சிக்கல் பற்றி தேவையில்லாமல் எதை எதையோ சிந்தித்து அதை பெரிதாக ஆக்குகிறார்கள். தன்னைவிட மற்றொரு பெண்ணின் மீது அதிகம் கவனம் செலுத்துவது என்பது தவறான விஷயம் தான். ஆனால் அது தவறான உறவாகத்தான் இருக்கும் என்று உடனடியாக முடிவு செய்ய முடியாது. நேரடியாக நீங்கள் இப்படி கூறினால் உங்கள் பார்ட்னரைக் காயப்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். எனவே உண்மை எதுவுமே தெரியாமல் நீங்கள் குற்றச்சாட்டை வைக்க வேண்டாம்.
ஸெல்ஃப் லவ் : எல்லா விஷயத்திலும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது, காதலிலும் கூட! உங்கள் பார்ட்னர் உங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்றால் என்ன, உங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். செல்ஃப் லவ் கூறப்படுவது போல உங்கள் விருப்பங்கள், ஆசைகள் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நிறைவேற்றிக்கொள்ளலாம். உங்களைப் பற்றி, உங்களுடைய தேவைகளை முன்னிறுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புதிய நினைவுகளை உருவாக்குங்கள் : எப்படி பேசினாலும் அதற்கு ஒரு முடிவு கிடைக்கவில்லை, என்று நீங்கள் உணர்ந்தால் புதிய நினைவுகளை நீங்கள் உங்கள் பார்ட்னருடன் சேர்ந்து உருவாக்கலாம். உங்கள் மீது கவனம் குறைவதற்கு காரணம் சில நேரங்களில் நீங்களாகவும் இருக்கலாம். எனவே உங்கள் பார்ட்னர் மீது நீங்களும் கூடுதலாக அக்கறை செலுத்துங்கள். அவர் எதையெல்லாம் ‘மிஸ்’ செய்கிறார் என்பதை வெளிக்காட்டுங்கள்.