ஐ லவ் யூ கூறுங்கள் : தம்பதிகள் அடிக்கடி ஐ லவ் யூ சொல்வதால் இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? காலையில் எழுந்தவுடன் உங்கள் துணையை பார்த்து "ஐ லவ் யூ" என கூறுங்கள் அல்லது 'ஐ லவ் யூ' என ஒரு குறிப்பேட்டில் எழுதி கொடுங்கள். இதனை பார்க்கும் உங்கள் துணை மிகவும் மகிழ்ச்சியடைவார்.
காலை வணக்கம் : தினமும் உங்கள் கூட்டாளருக்கு 'காலை வணக்கம்' சொல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்கள் இருவரையும் நெருக்கமாக வைத்திருக்க உதவும். எனவே தினமும் காலை வணக்கம் சொல்வதை தவறவிடாதீர்கள். மேலும் நீங்கள் இருவரும் எழுந்தவுடன் ஒருவருக்கொருவர் கண்களை பார்த்து கொள்ளுங்கள். இது அன்பை பரிமாறுவது மட்டுமின்றி, சோம்பேறி உணர்வையும் நீக்கும்.