முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

இனிப்புகளில் மட்டும் தான் பன்னீரை சேர்க்க வேண்டும் என்பது அவசியமில்லை. கார உணவுகளில் கூட சேர்க்கலாம்; உதாரணமாக ஏலம், லவங்கம், உள்ளிட்டவை பிரியாணி போன்ற அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் சேர்க்கப்படும்.

 • 19

  ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

  இயற்கையான அழகுப் பொருட்களில் ஒன்று தான் பன்னீர், அதாவது ரோஜா இதழ்களிலிருந்து எடுக்கப்படும் இந்த நறுமண திரவியம், இயற்கையான குளிர்ச்சியான தன்மை கொண்டது. சருமத்தில் இருக்கும் பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அது மட்டுமில்லாமல் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, வறட்சி அடையாமல் பாதுகாக்கவும் பல நூற்றாண்டுகளாக பன்னீர் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமீபகாலமாக சரும மருத்துவர்களும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பன்னீரில் இருக்கும் மருத்துவ குணங்களை அங்கீகரித்து தினசரி அதை பயன்படுத்தலாம் என்று கூறியிருக்கின்றனர். மேலும், பன்னீர் சேர்க்கப்பட்ட பல விதமான அழகு சாதன பொருட்களும் வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 29

  ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

  ரோஜா பூக்களை ஸ்டீம் செய்து, அதிலிருந்து எக்ஸ்ட்ராக்ட் செய்யப்படும் திரவம் தான் பன்னீர். இது சருமத்தில் இருக்கும் பிஎச் பேலன்சை சீராக்கும், எல்லா வகையான சருமத்தினரும் இதைப் பயன்படுத்தலாம். பன்னீர் ஒரு இயற்கையான டோனராகவும் மலிவு விலையில் சரும பராமரிப்பை மேற்கொள்வதற்கும் உதவுகிறது. பொதுவாக பன்னீர் என்று சொன்னாலே சருமத்தை புத்துணர்ச்சியாக்கும், பொலிவாக்கும் மாசு மங்கு போன்றவற்றை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் என்பதை அனைவரும் அறிவர்.

  MORE
  GALLERIES

 • 39

  ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

  ஆனால் பலருக்கும் பன்னீரைப் சமையலுக்கும் பயன்படுத்தலாம் என்பது பற்றி தெரியவில்லை. ஒருசில உணவுப் பொருட்களில் பன்னீரைச் சேர்த்தால் உணவின் சுவையும் மணமும் பல மடங்கு அதிகரிக்கும். பன்னீரை எவ்வாறு சமையலில் சேர்க்கலாம் என்பது பற்றிய இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 49

  ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

  கார மற்றும் இனிப்பு உணவுகளில் பன்னீர் : பன்னீரை சேர்த்து சமைக்கும் பொழுது இனிப்பு மற்றும் கார வகை உணவுகளின் சுவையை மேம்படுத்த முடியும். சர்பத், பழச்சாறுகள், மில்க் ஷேக் முதல் பேக் செய்யப்படும் கப்கேக், கேக் பிஸ்கட் உள்ளிட்ட பல வகையான இனிப்பு வகைகளுக்கு நறுமணமிக்க ரோஜாவின் வாசனையை கூட்டுவதற்கு பன்னீரை சேர்க்கலாம். குறிப்பாக பன்னீர் மற்றும் வெண்ணிலா சேர்த்து செய்யப்படும் இனிப்பு வகைகள் அசத்தலான சுவையை கொண்டிருக்கும். சாதாரணமாக பழக்கலவை அல்லது பழங்களை சாப்பிடும் பொழுதும் கூட 1 துளி ரோஸ் வாட்டரை அதில் விட்டாலே, சுவை பல மடங்கு அதிகரிக்கும். பாரம்பரியமாக செய்யப்படும் இனிப்பு வகைகளில் கூட பன்னீரை சேர்க்கலாம். உதாரணமாக, ஜாமுன், கேசரி அல்லது பாயசத்தில் ஒரு சில துளிகள் பன்னீர் சேர்த்தால் அதன் சுவையும் மணமும் பல மடங்கு அதிகரிக்கும்.

  MORE
  GALLERIES

 • 59

  ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

  இனிப்புகளில் மட்டும் தான் பன்னீரை சேர்க்க வேண்டும் என்பது அவசியமில்லை. கார உணவுகளில் கூட சேர்க்கலாம்; உதாரணமாக ஏலம், லவங்கம், உள்ளிட்டவை பிரியாணி போன்ற அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் சேர்க்கப்படும். அதே போலவே, பன்னீரையும் காரமான உணவுகளில் அதன் மணத்தை அதிகரிக்க ஒரு சில துளிகள் சேர்க்கலாம். ஏலக்காய், கொத்தமல்லி, சீரகம், இஞ்சி, குங்குமப்பூ உள்ளிட்ட பொருட்களுடன் ஒரு சில துளிகள் பன்னீர்-ஐ சேர்ப்பது அந்த உணவின் சுவையை மேம்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 69

  ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

  வீட்டிலேயே ரோஜாப்பூக்களை வைத்து பன்னீர் தயாரித்து விடலாம்.. சமையலுக்கு அல்லது சருமத்துக்கு, நீங்கள் வீட்டிலேயே பன்னீரை தயார் செய்யலாம். ரோஜாக்களை ஆவியில் வேகவைத்து அதிலிருந்து எக்ஸ்ட்ராக்ட் செய்யப்படுவது என்பது பார்ப்பதற்கு கடினமாக தெரிந்தாலும், அது மிக மிக எளிமையான செயல்முறை தான்.

  MORE
  GALLERIES

 • 79

  ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு ரோஜா இதழ்களை சேர்த்து, குறைந்த தீயில் வைத்து, சூடாகி ஆவி வரும் வரை லேசாக கிளறிக்கொண்டே இருக்கவும். அதன் பிறகு அடுப்பை அணைத்து அதை அந்த பாத்திரத்தை இறுக்கமாக மூட வேண்டும். சூடான நீரில் ரோஜா இதழ்கள் 20 நிமிடங்கள் வரை அப்படியே ஊற வேண்டும். அதற்குப்பிறகு சுத்தமான மெல்லிய துணி கொண்டு அந்த நீரை வடிகட்டுங்கள்.

  MORE
  GALLERIES

 • 89

  ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

  வடிகட்டிய நீர் ஆறும் வரை காத்திருங்கள். ஆறிய பின்பு, பாட்டிலுக்கு மாற்றி குளிர் சாதனப்பெட்டிக்கு மாற்றி பயன்படுத்தலாம். எளிதான முறையில் பன்னீர் வீட்டிலேயே தயார்! இதை நீங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். மேலும் பன்னீர் தயாரிக்கும் போது கவனம் தேவை

  MORE
  GALLERIES

 • 99

  ரோஸ் வாட்டரை வீட்டிலேயே ஈசியா செய்யலாம் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

  நீங்கள் வீட்டிலேயே பன்னீர் தயார் செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் : ரோஜாக்கள் எந்த விதமான பூச்சிக்கொல்லி இல்லாமல் விளைவிக்கப்பட்ட ரோஜாக்கள் ஆக இருக்க வேண்டும். எனவே ரோஜாக்களை வைத்து நீங்கள் பன்னீர் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் வாங்கியது அல்லது நீங்கள் வீட்டிலேயே விளைவிக்கும் ரோஜாக்களை பயன்படுத்துங்கள். அதுமட்டுமில்லாமல் ரோஜாக்களை கொதிக்க வைப்பதற்கு முன்பு அவற்றை நன்றாக சுத்தம் செய்தது மிகவும் அவசியம்.

  MORE
  GALLERIES