ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

ice creams : பழங்களைகொண்டு தயாரிக்கப்படும் சில சுவையான ஹோம்மேட் ஐஸ்கிரீம்களை இங்கே பார்க்கலாம்.

 • 16

  சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

  எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களை டயட் கட்டுப்பாட்டை மீற செய்யும் மிகவும் சுவையான ஒன்று ஐஸ்கிரீம்கள். விதவிதமான ஃபிளேவரில் செய்யப்பட்டிருக்கும் மனதை மயக்கும் சுவையுடைய ஐஸ்கிரீம்களை பார்த்தும் பார்க்காமல் போவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. எனினும் மனதை கட்டுப்படுத்த முடியாமல் ஐஸ்கிரீமை ருசிப்பதும் டயட்டை கெடுத்துவிடும். ஏனென்றால் 100 கிராம் வெண்ணிலா ஐஸ்கிரீமில் சுமார் 207 கலோரிகள் இருக்கும். டயட்டில் இருக்கும் உங்களுக்கு சர்க்கரை மற்றும் கலோரிகள் நிறைந்த ஐஸ்கிரீம்களை சாப்பிட தயக்கமாக இருக்கிறதென்றால் ஆரோக்கியம் மற்றும் டயட்டை சமரசம் செய்யாமல், ஃபிரெஷ்ஷான பழங்களின் இனிப்புடன் தயாரிக்கப்படும் ஹோம்மேட் ஐஸ்கிரீம்களுக்கு மாறுங்கள். பழங்களைகொண்டு தயாரிக்கப்படும் சில சுவையான ஹோம்மேட் ஐஸ்கிரீம்களை இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

  மேங்கோ ஐஸ்கிரீம் : மாம்பழத்தின் நன்மையுடன் இந்த எளிய ஐஸ்கிரீமை உருவாக்கலாம். இந்த மேங்கோ ஐஸ்கிரீமை செய்ய தொடங்க1 லிட்டர் முழு கொழுப்புள்ள (full fat) பாலை மிதமான தீயில் சூடாக்கி, பால் அடிபிடிக்காததவாறு கிளறி கொண்டே இருங்கள். இதற்கிடையில் நன்கு பழுத்த மற்றும் இனிப்பான மாம்பழங்களை கழுவி, நறுக்கி, மென்மையான கூழாக்கி அதை ஃபிரிட்ஜில் வைக்கவும். 1 லிட்டர் பால் பாதியாக குறைந்தவுடன், ஏலக்காய்த் தூள், நட்ஸ், குங்குமப்பூ இழைகள் மற்றும் ஃபிரெஷ் லோ ஃபேட் கிரீம் சேர்த்து கெட்டியாக மாறும் வரை அதை நன்றாக கலக்கவும். பின் அடுப்பை அணைத்து இந்த கலவை குளிரும் வரை காத்திருக்கவும். பின் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டு ஜில்லென்று இருக்கும் மாம்பழ கூழை கிரீம் பால் கலவையுடன் நன்றாக கலக்கவும். 8 மணி நேரம் ஃபிரிஸரில் வைத்து பின் சுவைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 36

  சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

  முலாம்பழ ஐஸ்கிரீம் : ஃப்ரெஷ்ஷான முலாம்பழத்தாய் எடுத்து அதை நன்கு பிசைந்து கூழாக்கி கொள்ளுங்கள். குழைக்கப்பட்ட முலாம்பழத்தை 2 கப் அளவு எடுத்து, அதை 2 கப் குளிர்ந்த லோ ஃபேட் கிரீம் மற்றும் 1 கப் கிரீக் யோகர்ட் சேர்க்கவும். பின்னர் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து ஹேண்ட் பிளெண்டரைப் பயன்படுத்தி கலவையை நன்றாக கிளறவும். பின் இதை ஒரு ஐஸ்கிரீம் கன்டெயினருக்கு மாற்றி ரெஃப்ரிஜிரேட் செய்யவும். சுமார் 1 மணி நேரம் கழித்து அதை வெளியே எடுத்து வறுத்த பாதாம், முலாம்பழம் விதைகள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து நன்றாக கலந்து 5-6 மணி நேரம் ஃபிரிஸரில் வைக்கவும். பின் வெளியே எடுத்து முலாம்பழ ஐஸ்கிரீமை ருசியுங்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

  ஜாமூன் ஐஸ்கிரீம் (நாவற்பழ ஐஸ்கிரீம்) : இந்த சூப்பர் ஹெல்தி ஐஸ்கிரீமை செய்ய துவங்க 2 கப் நாவற்பழம் எடுத்து, விதையை அகற்றி கொள்ளவும். ஒரு பிளெண்டரில் விதை நீக்கப்பட்ட நாவற்பழத்தை கூழ் செய்து, 1 டீஸ்பூன் ஸ்டீவியா (சர்க்கரைக்கு கலோரி இல்லாத மாற்றாகப் பயன்படுத்தப்படும் பொருள்), 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் தூள் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல செய்து தனியே வைக்கவும். இதற்கிடையே 2 கப் குளிர்ந்த லோ ஃபேட் கிரீம் மற்றும் ½ கப் கிரீக் யோகர்ட் சேர்த்து, ஹேண்ட் பிளெண்டரைப் பயன்படுத்தி மென்மையான கிரீமை உருவாக்கவும். வெண்ணிலா எசென்ஸ் மற்றும் ½ தேக்கரண்டி ஸ்டீவியா (விரும்பினால்) சேர்க்கவும். கடைசியாக இதனுடன் ஏற்கனவே தயார் செய்து வைத்து நாவற்பழ பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கலந்து ஐஸ்கிரீம் மோல்ட் அல்லது கன்டெயினரில் ஊற்றி மேலே நட்ஸ்கள் மற்றும் உலர் பழங்களை மேலே தூவி ஃபிரிட்ஜில் வைத்து சில மணி நேரம் கழித்து சுவைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 56

  சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

  மிக்ஸ்டு பெர்ரிஸ் ஐஸ்கிரீம் : 1 லிட்டர் பாலை எடுத்து மிதமான தீயில் சூடாக்கவும், பாத்திரத்தின் அடிப்பகுதியில் பால் அடிபிடிக்காதவாறு கிளறவும். இதற்கிடையில் ஒரு பவுலில் வெதுவெதுப்பான எடுத்து அதில் உலர் வகை பெர்ரிகளை சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுத்து சுவைக்கு ஏற்ப சிறிது தேன் கலந்து பெர்ரிகளை கெட்டியான பேஸ்டாக கலக்கவும். 1 லிட்டர் பால் பாதியாக சுண்டியவுடன் லோ ஃபேட் கிரீம், ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியான கலவையாக மாற்றவும், அடுப்பை அணைத்து ஆறிய பின் அதில் பெர்ரி மிக்ஸை ஊற்றி கெட்டியாகவும் கிரீமியாகவும் மாறும் வரை கிளறவும். பின் வேறு ஒரு பவுலுக்கு மாற்றி 8 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து பின் எடுத்து சுவைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 66

  சர்க்கரையே இல்லாமல் ஐஸ்க்ரீம் செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி...

  பனானா அன்ட் பீனட் ஐஸ்கிரீம் : இந்த ஈஸியான ஐஸ்கிரீமை தயாரிக்க 3 வாழைப்பழங்களை மசித்து, அதில் ½ கப் பீனட் பட்டர் , 2 கப் குளிர்ந்த கிரீக் யோகர்ட் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் வெனிலா எசென்ஸ் சேர்த்து மிருதுவாகவும் நுரையாகவும் மாறும் வரை நன்கு கிளறவும். இதை ஒரு கன்டெயினருக்கு மாற்றி 5-7 மணி நேரம் நன்கு ஃப்ரீஸ் செய்யவும். பின் வறுத்த பாதாம், வேர்க்கடலை மற்றும் உலர் பழங்கள் சேர்க்கலாம்.

  MORE
  GALLERIES