இருப்பினும், ஒரு நபர் என்ன கூற வருகிறார் என்பதை உடல்மொழியை வைத்துக்கொண்டு கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம்தான். ஏற்கனவே கூறியது போல வார்த்தைகள் தவறாக இருந்தாலுமே, உடல் மொழியில் பொய் சொல்ல முடியாது. அது மட்டுமில்லாமல், உடல் மொழி மூலம், சொல்ல விரும்புவதை கச்சிதமாக தெரிவிக்க முடியும். எனவே ஒரு நபரின் உடல்மொழியையும், சைகைகளையும், பார்வையும் சரியாக புரிந்து கொண்டால், அது உறவுகள் மேம்பட உதவியாக இருக்கும்.
கண்களைப் பார்த்து பேசுவது மற்றும் சிரிப்பு : கண்களைப் பார்த்து பேசுவது என்பதில் இருந்து நீங்களே பல விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம். கண்களைப் பார்த்து பேசும் பொழுது உண்மை மட்டும் தான் கூற முடியும். எனவே ஒரு நபர் உங்கள் கண்களை பார்த்து பேசும் போது உங்களுடன் பேசுவதில் விருப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் உங்களுடன் பேசுவதில் சவுகரியமாக இருக்கிறதா அல்லது உங்களை தவிர்க்கிறாரா என்பதையும் கண்டு கொள்ள முடியும். மேலும், பேசும் பொழுது புன்னகைத்து உங்கள் கண்களை பார்த்து பேசினால் அவருக்கு உங்களுடன் பேசுவதில் விருப்பம் இருக்கிறது என்றும் அர்த்தம்.
உங்கள் முன் அமர்ந்திருக்கும் நிலை : ஒரு நபர் எவ்வாறு அமர்ந்திருக்கிறார், கைகள் கால்களை நேராக வந்திருக்கிறாரா, கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளாரா, கைகளை எவ்வாறு வைத்திருக்கிறார் என்ற அடிப்படையில் அவருடைய உடல் மொழியை, என்ன நினைக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒரு நபர் நேராக அமர்ந்திருந்தால், அதாவது உடலை வளைக்காமல், குறுக்காமல் நேராக இருந்தால் அவர் அதிக தன்னம்பிக்கை கொண்ட நபர் என்று அர்த்தம். லேசாக கூன்விழுந்தவாறு, சாய்ந்தவாறு அமர்ந்திருந்தால் அவருக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கிறது அல்லது அவர் இருக்கும் அந்த இடத்தில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்று அர்த்தம்.
கைகள் மற்றும் கால்களை கோணலாக வைத்துக் கொள்வது : கை அல்லது / மாற்றும் கால்களை கோணலாக வைத்துக் கொண்டால், அல்லது குறுக்கு வாட்டாக வைத்துக் கொண்டால், நீங்கள் இருப்பதை அல்லது நீங்கள் சொல்வதை விரும்பவில்லை என்று பொருள். அல்லது உங்களிடம் அந்த நபர் வெளிப்படையாக எதுவும் பேச மாட்டார் என்றும் அர்த்தமாகும்.