நமது குடும்ப உறுப்பினர்களை போலவே சகஜமாக நம்முடன் வாழ்பவை வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள். இந்திய வீடுகளில் அதிகம் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளாக இருக்கின்றன நாய்கள். மனிதர்கள் சாப்பிடுவதை போலவே நல்ல ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு, வழக்கமான அழகுபடுத்துதல், சரியான காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகள் மற்றும் செய்யப்பட வேண்டிய பரிசோதனைகள் உள்ளிட்டவை நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு முக்கியமானதுவை என்று கூறுகின்றனர் கால்நடை மருத்துவர்கள்.
ஆனால் நம் நாட்டை பொறுத்த வரை நாய்களுக்கு தேவைப்படும் சரியான நாய் உணவை தேர்ந்தெடுத்து கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றி பலருக்கு தெரியவில்லை. பெரும்பாலான வீடுகளில் இன்னும் மனிதர்கள் தாங்கள் சாப்பிட்டு எஞ்சிய உணவுகளை நாய்களுக்கு கொடுக்கின்றனர். அதே போல பேக்கேஜ் செய்யப்பட்ட Dog Food-ஐ சாப்பிடும் நாய்களுக்கு அனைத்து ஊட்டச்சத்து தேவைகளும் பூர்த்தியாகிறதா என்பதை பற்றி உரிமையாளர்கள் கவனிப்பதில்லை.
நாய்களின் வாழ்வில் உணவு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக அது வளரும் ஆண்டுகளில். அவற்றின் வயது, இனம், வாழ்க்கை முறை மற்றும் காலநிலை ஆகியவற்றை பொறுத்து அவற்றுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் வேறுபடுகின்றன. நாய்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை அளிக்க சமச்சீரான,சுவையான உணவுகளை அளிக்க அனுபவம் வாய்ந்த ஒரு கால்நடை மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
பெரும்பாலான பிராண்டுகள், நாய்களுக்கு சமச்சீர் ஊட்டச்சத்தை வழங்கும் அதே நேரத்தில் அவற்றின் செயல்பாட்டு நிலை மற்றும் இனத்தின் அடிப்படையில் எவ்வகை சிறப்பாகச் செயல்படும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். நாய்களுக்கு வழங்க வேண்டிய உணவின் அளவு, கூடுதல் சப்ளிமெண்ட்ஸ் அல்லது சமச்சீரான வீட்டுஉணவை வழங்குவது பற்றி இங்கே பார்க்கலாம்..
பொதுவாக பெரும்பாலான உரிமையாளர்கள் சப்ளிமெண்ட்ஸ் கொடுப்பதோடு மட்டுமின்றி மிகுந்த அன்புடன் வீட்டில் சாதாரணமாக தயாரிக்கப்பட்ட உணவுகள் என அனைத்தையுமே தங்கள் நாய்களுக்கு கொடுக்கின்றனர். ஆனால் நாய் வளர்ப்போரின் இந்த செயல் உண்மையில் அவற்றுக்கு மிகவும் சமநிலையற்ற உணவாக அமைகிறது. இதனால் சில நேரங்களில் நாய்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் கிடைக்கிறது. இதனால் அவற்றின் உடல்நலனில் சிக்கல்கள் ஏற்படலாம்.
எனவே நாய் உரிமையாளர்கள் தாங்கள் வாங்கும் செல்லப்பிராணி உணவு ஃப்ரெஷ் மற்றும் ஆர்கானிக் இறைச்சியிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய, குறிப்பிட்ட உணவில் எந்த வகையான புரத மூலத்தை (protein source) பயன்படுத்தி உளளர்கள் என்பதை சரிபார்க்க வேண்டும். சரியான Dog Food-ஐ தேர்வு செய்வதில் விலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
விலை உயர்ந்த சில செல்லப்பிராணி உணவுகள் பணத்திற்கேற்ப சிறந்த மதிப்பை வழங்குகின்றன. விலை மலிவான செல்ல பிராணி உணவுகள் குறைந்த ஊட்டச்சத்துக்களையே வழங்குகின்றன. ஒரு சிறந்த கால்நடை மருத்துவருடன் கலந்தாலோசித்து உங்கள் நாய்க்கு ஏற்றவாறு சிறந்த டயட் பிளானை உருவாக்குவதும் நல்ல நடவடிக்கையாக இருக்கும். இந்நடவடிக்கை உணவு அளவு, உணவு வகைகள், தேவையான கூடுதல் ஊட்டச்சத்து உள்ளிட்ட பலவற்றை ஒரு வழக்கமான அடிப்படையில் தெளிவாக வரையறுக்க உதவுகிறது.
நம்பகமான மற்றும் புகழ்பெற்ற பிராண்டுகளிலிருந்து ஃப்ரெஷ்ஷான உணவை மட்டுமே எப்போதும் வாங்குவதையும், உலர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் (dry and dark space.) அவற்றை சேமித்து வைப்பதையும் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்கள் நாய் உணவருந்தும் போது எந்த எதிர்மறை விளைவுகளும் இல்லாமல் தங்கள் உணவை நனறாக சாப்பிடுவதை இதன் மூலம் உறுதி செய்யலாம்.