முதலில் வீட்டில் டாய்லெட் , கை துடைக்க என பயன்படுத்தப்படும் டிஷ்யூ பேப்பரில் பால் பேனா கொண்டு ஒரு வட்டம் போடுங்கள். அதன் மேல் சானிடைசரை ஊற்றினால் பால் பேனா மை அழிந்து திட்டு திட்டாக மாறும். அவ்வாறு கரைந்தால் அது போலி. போட்ட வட்டம் போட்டபடி அப்படியே இருந்து பேனா மை அழியாமல் இருந்தால் அது ஒரிஜினல் சானிடைசர்.
அடுத்த ஸ்டெப் கோதுமை மாவு. இதற்கு கோதுமை மாவுதான் வேண்டும் என்றில்லை எதுவாகவும் இருக்கலாம். ஒரு ஸ்பூன் மாவில் சானிடைசர் ஊற்றி பிசைந்தால் அது மாவுடன் கரைந்து சப்பாத்திக்கு உருட்டும் மாவு போல் பிசைய முடிந்தால் அது கலப்படம் கொண்ட சானிடைசர். ஒரிஜினல் சானிடைசர் ஊற்றினால் அது மாவுடன் கலக்காமல் திரி திரியாக உதிரும்.