பிப்ரவரி மாதம் வந்தாலே காதல் அனைவரையும் வாட்டி எடுக்க தொடங்கி விடும் என்ற ரீதியில் காதலர் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிப்ரவரி மாதம் முழுவதுமே காதல் மாதமாகவே இருக்கிறது. காதலர் தினத்துக்கு முன்னும் பின்னும், பிரப்போஸ் செய்வது முதல், பிரேக்கப் வரை என்று ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்த ஜோடிகள் என்று அனைவரும் தங்களுடைய காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
தனித்துவமான, எமோஷனலாக மனதைத் தொடும் பரிசு :நம்முடைய மனதுக்கு நெருக்கமான நண்பர்களுக்கு பரிசுகள் கொடுப்பது என்பது இரண்டு தரப்பினரையும் மகிழ்ச்சியாக உணர வைக்கும். அதே போல காதலர் தினத்திற்கு உங்களுடைய வாலன்டைன் தினத்தை ஸ்பெஷலாக மாற்ற சிறப்பு பரிசு வழங்க வேண்டும். நீங்கள் தனித்துவமான பரிசாக வழங்கினால் உங்களுடைய முதல் காதலர் மிகவும் ஸ்பெஷலாக அமைந்து விடும். நீங்கள் வழங்கும் பரிசு மறக்க முடியாத மாதிரியும் உணர்ச்சி பூர்வமாகவும் இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீரகள் என்பதையும் அவர்கள் உணர்வார்கள்.
ரோஜா பூக்கள்: காதல் என்று சொன்னாலே கண்களை மூடிக்கொண்டு ஒரு சில விஷயங்கள் கூறலாம். அதில் முதன்மையானது ரோஜா. இப்போதும் ஒற்றை ரோஜாவை வைத்து பிரப்போஸ் செய்வது வழக்கத்தில் உள்ளது. உங்கள் காதலர் தினத்தை எளிமையாக ஆனால் அழகாக கொண்டாட ஒற்றை ரோஜா அல்லது ரோஜா பூச்செண்டு கொடுக்கலாம். உங்கள் காதலியை, ஏன் காதலனைக் கூட வெட்கப்படவைக்க ஒற்றை ரோஜாவை பரிசாகக் கொடுக்கலாம்.
காதலர் தினத்தில் காதலைச் சொல்லலாம்: காதலர் தினத்தன்று பெரும்பாலும் காதலர்கள் நாள் முழுவதும் ஒன்றாக செலவிட்டு, பரிசுகளை பரிமாறிக் கொள்வது போலத்தான் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு தங்களுடைய முதல் காதலர் தினமே மிக ஸ்பெஷலாக அமைந்துவிடுகிறது. அதில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்றால் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்த காதலை உங்கள் காதலி அல்லது காதலனிடம் தெரிவித்து விடுங்கள்.
டின்னர் டேட்: மாலை மற்றும் இரவு நேரம் வந்தாலே தனி உலகம் தோன்றுவது போல இருக்கும். அதுவும் நேசிக்கும் நபருடன் மாலை நேரத்தை செலவிடுவது ரம்யமான உணர்வைத் தரும். உங்கள் காதலர் தினத்தை நீங்கள் ஸ்பெஷலாக மாற்ற வேண்டும் என்றால் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு மிகவும் பிடித்த ரெஸ்டாரண்ட்டின் டின்னர் டேட் புக் செய்யுங்கள். காதலர் தினத்திற்கு பல்வேறு உணவகங்களும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும். அதில் உங்கள் பார்ட்னருக்கு எதையெல்லாம் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு அவரை அவருக்கு அளிக்கலாம்.