நம்மை சுற்றி உள்ள மக்களுக்கு மத்தியில் நாம் மிகவும் பிரபலம் அடைந்தவராக வலம் வர வேண்டும் என்ற விருப்பம் நமக்கு இருக்கும். ஆனால், ஒரு கேக் சாப்பிடுவதைப் போன்ற எளிமையான காரியம் அல்ல அது. உங்கள் சமூக அந்தஸ்தை நீங்கள் தக்க வைப்பதுடன், அவ்வபோது சிறப்பான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும். எப்போது துறுதுறுவென இருக்கும் நபராக நீங்கள் வலம் வர வேண்டும். நம்மை சுற்றி உள்ள அனைவரின் கவனத்தையும் நம்மை நோக்கி திருப்பவதே தனித்திறன் கொண்ட விஷயம் தான். அதற்கு நீங்கள் சில ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியமானது.
நல்லதொரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள் : இன்றைக்கு வெயில் எப்படி இருக்கிறது என்ற பழமையான விசாரணைகளை ஒதுக்கி தள்ளுங்கள். உங்கள் முன்னால் இருக்கும் நபரை கூர்ந்து கவனித்து, “இந்த ஆடை மிகவும் நன்றாக உள்ளது. இதை எங்கே வாங்கினீர்கள்’’ என்ற கேள்வியோடு தொடங்கவும். இதற்கு அவர் ஆர்வத்தோடு பதில் அளித்தால், அடுத்தக்கட்ட வாதங்களை முன்னெடுக்கவும்.
அனைவரது பெயர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் : உங்கள் அலுவலகத்தில் அல்லது நீங்கள் குடியிருக்கும் ஏரியாவில் எத்தனை பேர் இருந்தாலும் சரி, எல்லோரது பெயர்களையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அனைவரையும் பெயர் சொல்லி நீங்கள் அன்போடு அழைக்கும்போது, ஏதோ வெகுநாட்கள் பழகியதைப் போன்று உணருவார்கள்.
உங்கள் தோற்றம் சிறப்பானதாக இருக்க வேண்டும் : நாம் பிரபலமானவராக இருக்க விரும்பினால் நம் தோற்றமும் சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவரி வெளித்தோற்றம் மற்றும் உடை அலங்காரம் ஆகியவைதான் அவர்களுடைய பெர்சனாலிட்டியை பெரிதாக காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் தேவைப்படும் இடங்களில் நம் பேச்சு மிகுந்த கனிவோடும், சில இடங்களில் நல்ல கம்பீர தோரணையுடனும் இருக்க வேண்டும்.