நீங்கள் வீட்டில் தங்கி, நாள் முழுவதும் ஓய்வெடுக்க முடிந்தால் பகல் நேரத்தில் கொஞ்சம் தூக்கம் வருவது பெரிய கவலை இல்லை. ஆனால் வேலை நேரத்தில் பகலில் தூக்கம் வருவது என்பது வேலையில் பின்தங்குவது, குறித்த நேரத்திற்குள் வேலைகளை முடிக்க முடியாமல் போவது போன்ற கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே வேலை நேரத்தில் வரும் பகல்நேர தூக்கத்தைத் தவிர்க்க 5 ஒர்க் பிளேஸ் ஹேக்ஸ்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் போது தூக்கம் வராமல் இருக்க உதவும் 5 வழிகளை இங்கே பார்க்கலாம்.
சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள்: நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைகளை தொடர்ச்சியாக செய்வது பிற்பகல் நேரத்தில் உங்களுக்கு களைப்பை அதிகப்படுத்தலாம். எனவே உங்கள் இருக்கையிலிருந்து எழுந்து நடப்பது உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. அடிக்கடி சீட்டிலிருந்து எழுந்து சென்று சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்து விடுவருவது உங்களை சுறுசுறுப்பாகவும், அலெர்ட்டாகவும் வைத்திருக்க உதவும் மற்றும் உங்கள் வேலையில் சிறப்பாக கவனம் செலுத்தலாம்.
உங்கள் பணியிடத்தை முடிந்தவரை பிரைட்டாக வைத்திருங்கள்: நீங்கள் உட்கார்ந்து வேலை செய்யும் ரூம் அல்லது சீட்டிற்கு அருகே ஜன்னல் இருந்தால் ஸ்கிரீனை ஓபன் செய்து சிறிது இயற்கை ஒளியை உள்ளே விடுங்கள். பணியிடத்தில் உள்வரும் இயற்கை ஒளி உங்களுக்கு அதிக விழிப்புணர்வு மற்றும் ஆற்றலை பெற உதவும். மேலும் உங்களைச் சுற்றியுள்ள சூழலை முடிந்தவரை வெளிச்சமாக வைக்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் மிகவும் குறைந்த வெளிச்சத்தில் வேலை செய்தால், ஆற்றல் குறைவாக, மந்தமாக இருப்பதை போல உணர்வீர்கள்.
உணவில் கவனம்: சில உணவுகள் உறங்குவதற்கு உதவும். குறிப்பாக பொங்கல் பற்றி நமக்கே தெரியுமே.. காலை நேரத்தில் பொங்கலை சாப்பிட்டு விட்டு சென்றீர்கள் என்றால் வேலை துவங்கி சிறிது நேரத்திலேயே தூக்கம் கண்ணை கட்டிவிடும். அதே போல மதிய உணவு அதிகமாக சாப்பிட வேண்டாம், ஏனென்றால் அது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தும்.
டீ பிரேக்: உங்களை தூக்கத்திலிருந்து உடனடியாக விடுபட வைக்க நீங்கள் டீ அல்லது காபி பிரியராக இருந்தால் போதும். மிகவும் களைப்பாகவும், தூக்கம் வருவது போலவும் உணர்ந்தால் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அதை அப்படியே ஓரங்கட்டி வைத்து விட்டு ஒரு டீ அல்லது காபி குடித்து விட்டு வாருங்கள். பின்னர் நீங்கள் உற்சாகமாக வேலைகளை தொடர்வீர்கள்.
பாடல் கேட்கலாம்: கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பெரும்பாலும் ஹெட்போன் பயன்படுத்த அனுமதி இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் உங்கள் பர்சனல் ஹெட்செட் பயன்படுத்தி ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் உங்களுக்கு பிடித்த இசை அல்லது பாடல்களை கேட்டு உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். இப்பழக்கம் உங்கள் மூளையை தட்டி எழுப்பி, உங்கள் மனநிலையை புத்துணர்ச்சியாக வைக்கும்.