ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அலுவலக வேலையில் உங்களைப் பிறர் பயன்படுத்திக்கொள்வதை எப்படி தடுப்பது..?

அலுவலக வேலையில் உங்களைப் பிறர் பயன்படுத்திக்கொள்வதை எப்படி தடுப்பது..?

நீங்கள் எங்கிருந்தாலும் சரி, வேலை செய்யும் இடத்திலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ உங்கள் எல்லைகளை வரையறுக்க வேண்டும். யாராவது உங்களுக்கு வேலை குறித்த விஷயங்களை ஆணையிட்டு செய்ய சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை தவிர்த்து விடுங்கள். இது உங்களின் மேலதிகாரிக்கு பொருந்தாது.

 • 16

  அலுவலக வேலையில் உங்களைப் பிறர் பயன்படுத்திக்கொள்வதை எப்படி தடுப்பது..?

  பொதுவாக நமது வாழ்க்கையில் 2 வகையான மனிதர்களை சந்திக்க நேரிடும். ஒருவர், வேலையைச் செய்து முடிக்கும் கடின உழைப்பாளி, மற்றவர் மக்களையும் சூழ்நிலையையும் பயன்படுத்தி தனக்கான வேலையைச் செய்து முடிக்கும் சந்தர்ப்பவாதியாக இருப்பார். இதுபோன்று இரு வகையான மனிதர்களை நமது அன்றாட வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். குறிப்பாக அலுவலக வேலைகளில் இது போன்ற நபர்கள் அதிகம் இருப்பார்கள். எனவே, அலுவலகத்தில் ஒருவர் உங்களை பயன்படுத்தி கொள்கிறார் என்றால், அதை தடுப்பதற்கு இந்த பதிவில் கூடும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

  MORE
  GALLERIES

 • 26

  அலுவலக வேலையில் உங்களைப் பிறர் பயன்படுத்திக்கொள்வதை எப்படி தடுப்பது..?

  வேலையில் உறுதியாக இருங்கள் : நீங்கள் பணியமர்த்தப்படும் போது, உங்களின் பதவியின் அதிகாரம் குறித்த தெளிவை பெறுங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்து முடியுங்கள். மற்ற பணிகள் உங்கள் துறையுடன் தொடர்புடையவை அல்ல. மற்ற வேலைகளை நீங்கள் நன்றாக செய்து வருவதை உங்கள் நிறுவனம் உணர்ந்தால், அவர்கள் சில நேரங்களில் உங்களுக்கு அதிக பணிகளை ஒதுக்குவார்கள், சில சமயங்களில் அந்த பணிகள் உங்கள் வேலை விவரத்துடன் தொடர்புடையதாக இருக்காது. அவர்கள் உங்கள் பணி மேலாண்மை திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. அதனால்தான் நீங்கள் வழக்கமாகச் செய்யும் பணிகளில் மட்டும் நின்று கொள்வது சிறந்தது.

  MORE
  GALLERIES

 • 36

  அலுவலக வேலையில் உங்களைப் பிறர் பயன்படுத்திக்கொள்வதை எப்படி தடுப்பது..?

  மேலதிகாரியை நன்கு அறிந்திருங்கள் : உங்கள் மேலதிகாரி இல்லாத நேரத்தில் நீங்கள் உங்களது வேலைகளை தவிர கூடுதல் வேலை செய்தால், நீங்கள் என்ன செய்தாலும், அது ஒரு சிறிய இடைவேளையாக இருந்தாலும், அதுகுறித்து உங்கள் முதலாளிக்குத் தெரியப்படுத்துங்கள். மேலும், நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி உங்கள் முதலாளிக்கு எப்போதும் தெரியப்படுத்த வேண்டும். இதனால் உங்களை பிறர் பயன்படுத்தி கொள்ளாமல் இருக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 46

  அலுவலக வேலையில் உங்களைப் பிறர் பயன்படுத்திக்கொள்வதை எப்படி தடுப்பது..?

  உங்களின் எல்லைகள் : நீங்கள் எங்கிருந்தாலும் சரி, வேலை செய்யும் இடத்திலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ உங்கள் எல்லைகளை வரையறுக்க வேண்டும். யாராவது உங்களுக்கு வேலை குறித்த விஷயங்களை ஆணையிட்டு செய்ய சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை தவிர்த்து விடுங்கள். இது உங்களின் மேலதிகாரிக்கு பொருந்தாது.

  MORE
  GALLERIES

 • 56

  அலுவலக வேலையில் உங்களைப் பிறர் பயன்படுத்திக்கொள்வதை எப்படி தடுப்பது..?

  வெளிப்படையாக பேசுங்கள் : உங்களுக்காக பேசுவது மிகவும் முக்கியம். உங்களது பணி அதிக சுமையாக இருந்தால் அது பற்றி விரிவாகவும் வெளிப்படையாகவும் நீங்கள் பேச வேண்டும். நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்றால், நீங்கள் அவற்றை அப்படியே எடுத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தமாகி விடும். மேலும், உங்களுக்கு அதிக வேலைகளையும் கொடுக்க கூடும். அதே போன்று நீங்கள் எல்லா நேரங்களிலும் மக்களை மகிழ்விப்பவராக இருக்க முடியாது. எனவே, உங்களுக்கான முக்கியத்துவத்தை கொடுக்க மறவாதீர்கள்.

  MORE
  GALLERIES

 • 66

  அலுவலக வேலையில் உங்களைப் பிறர் பயன்படுத்திக்கொள்வதை எப்படி தடுப்பது..?

  ராஜினாமா : உங்களுக்கு வேறு இடத்தில் வேலை கிடைக்காது அல்லது உங்கள் வாழ்க்கை இங்கேயே முடிந்துவிடும் என்று எப்போதும் நினைக்காதீர்கள். நீங்கள் முக்கியமானவர் என்று உங்கள் நிறுவனம் நினைக்கவில்லை என்றால், வேறொரு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தால், உங்கள் நிறுவனம் தான் ஒரு நல்ல பணியாளரை இழப்பார்கள். உங்களின் தற்போதைய நிறுவனத்தில் உங்களை சித்திரவதை செய்தால் மட்டுமே ராஜினாமா பற்றி முடிவெடுக்கலாம். இது கடைசி முயற்சியாக எடுக்கப்பட வேண்டும்.

  MORE
  GALLERIES