முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

அடர்த்தியான மற்றும் கருமையான கூந்தலை நீங்கள் பெற விரும்பினால், உங்களுக்கான சில எண்ணெய்களை கூறுகிறோம். இது, உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவும்.

  • 110

    இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

    ஆண் / பெண் என அனைவருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று, தலைமுடி பிரச்சனை. தலைமுடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற அனைவருக்கும் ஆசை. ஆனால், அதற்காக நாம் சந்தையில் உள்ள பல எண்ணெய்களை பயன்படுத்துவோம். ஆனால், அதற்கான பலன் நமக்கு கிடைப்பதில்லை. அடர்த்தியான மற்றும் கருமையான கூந்தலை நீங்கள் பெற விரும்பினால், உங்களுக்கான சில எண்ணெய்களை கூறுகிறோம். இது, உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவும்.

    MORE
    GALLERIES

  • 210

    இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

    வெங்காய எண்ணெய் : சிறிய வெங்காயத்துடன், கறிவேப்பிலை இலையை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அதை சிறிய சிறிய உருண்டைகளாக்கி நிழலில் உலர்த்தி எடுக்கவும். பின்னர், அதை தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்றாக கூடாக்கவும். இந்த எண்ணெயை தலைக்கு தடவி வர கூந்தல் வளரும்.

    MORE
    GALLERIES

  • 310

    இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

    செம்பருத்தி எண்ணெய் : செம்பருத்தி பூவை நிழலில் வைத்து நன்கு உலர்த்தி பொடியாக அரைத்துக்கொள்ளவும். பின்னர், ஒரு வாணலியில் தேங்காய் எண்ணையுடன் இந்த பொடியை சேர்த்து நன்கு காய்ச்சி, வடிகட்டி பயன்படுத்தி வந்தால் கருமையான நீளமான கூந்தலை பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 410

    இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

    கருப்பு சீரக எண்ணெய் : ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அதில், ஒரு கைப்பிடி கருப்பு சீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். பின்னர், இந்த தண்ணீரை வடிகட்டி, அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி வர உஷ்ணம் குறைந்து முடி உதிர்வு குறையும்.

    MORE
    GALLERIES

  • 510

    இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

    மூலிகை எண்ணெய்: தேங்காய் எண்ணெய், துளசி எண்ணெய், வெந்தயம் மற்றும் வேப்பிலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து, அதை வடிகட்டி நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்தி வந்தால் நீளமான மற்றும் கருமையான கூந்தலை பெறலாம். இந்த என்னை முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 610

    இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

    கறிவேப்பிலை எண்ணெய் : ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு கறிவேப்பிலை இலைகளை சேர்த்து நன்கு சூடாக்கவும். பின்னர், அதை ஆற வைத்து வடிகட்டி தலைக்கு தடவி வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். முடி உதிர்வு குறைந்து அடர்த்தியும் அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 710

    இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

    எலுமிச்சை எண்ணெய் : எலுமிச்சை பழத்தின் தோலை சூரிய ஒளியில் நன்கு உலற வைத்து, பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றவும். இதை இரண்டு நாட்களுக்கு சூரிய ஒளியில் காய வைத்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 810

    இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

    முழு நெல்லிக்காய் ஆயில் : பெரிய நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, நன்கு உலர்த்தி பொடியாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக சூடு செய்யவும். அந்த எண்ணெய் நன்றாக ஆறியதும் தலைக்கு பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 910

    இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

    புதினா ஹேர் ஆயில் : புதினா இலைகளை நசுக்கி அதில் இருந்து கிடைக்கும் சாறுடன் பாதாம் எண்ணெயை சிறிது சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த இரண்டு எண்ணையையும் ஒரு பாட்டிலில் அடைத்து, அதை சூரிய ஒளியில் இரண்டு நாட்களுக்கு வைக்கவும். இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் நீளமான கூந்தலை பெறலாம்.

    MORE
    GALLERIES

  • 1010

    இந்த 8 வகை எண்ணெய்களை பயன்படுத்தி பாருங்க.. ஒரே மாதத்தில் உங்க முடி கட்டுக்கடங்காமல் வளரும்..!

    வெங்காய சீரம் : சின்ன வெங்காயத்தை மிக்ஸி நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். பின்னர், அரிசி கழுவிய தண்ணீரை கால் கப் எடுத்து, அதில் வெங்காய சாற்றை சேர்த்து தலையில் தேய்த்து 20 நிமிடங்களுக்கு பின்னர் தலைக்கு குளிக்கவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

    MORE
    GALLERIES