வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டு தோட்டத்தை வடிவமைப்பது உங்களுக்கு ஏராளமான செல்வத்தை பெற்றுத் தருவதோடு, உங்களில் நல்ல பாசிட்டிவான மனநிலையையும் உருவாக்கும். வீட்டில் ஒரு தோட்டம் அமைப்பதன் மூலம் ஆரோக்கியத்தையும் செழிப்பையும் பெறுவதை உறுதி செய்ய முடியும். வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாரம்பரிய இந்து கட்டிடக்கலை அமைப்பு, இது போன்ற இயற்கை அழகை அதிகரிக்க உதவும் பல வழிமுறைகளை கொண்டுள்ளன. நீங்கள் உங்கள் வீட்டில் மரம், செடி உள்ளிட்டவற்றை வளர்க்க விரும்பினால் உங்கள் தோட்டம் வாஸ்து இணக்கமாக இருக்க சில உதவிக்குறிப்புகளை பின்வருமாறு காணலாம்.
வாஸ்துவின் படி, மரங்களுக்கும் பிரதான வீட்டிற்கும் இடையே கணிசமான தூரத்தை பராமரிக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மரத்தின் நிழல் வீட்டின் மீது விழக்கூடாது. அரச மரம் போன்ற பெரிய மரங்களை வீட்டிற்கு மிக அருகில் நடக்கூடாது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவற்றின் வேர்கள் கட்டிடத்தின் அடித்தளத்தை சேதப்படுத்தும். துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க, புழுக்கள், பூச்சிகள், தேனீக்கள் அல்லது பாம்புகளை ஈர்க்கும் மரங்களை தோட்டத்தின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நடலாம்.