காதலர் தினத்தில் வீட்டை அலங்கரிக்க வேண்டுமெனில் நிறைய நேரம் தேவைப்படும். வீட்டை எப்படி அலங்கரிக்கலாம்? எதைக் கொண்டு அலங்கரிக்கலாம்? அலங்காரப் பொருட்களுக்கு எவ்வளவு செலவாகும் என்று பல யோசனைகள் உங்களுக்கு உண்டாகலாம். ஆனால் உண்மையில் வீட்டை அலங்கரிப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டுமென்பதில்லை. புதுமையான கலைநயத்துடனான யோசனைகள் இருந்தாலே, வீட்டை அழகாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் அலங்கரிக்கலாம். சில சமயங்களில் சிறிய பொருட்கள் கூட, வீட்டை அழகாக அலங்கரிப்பதற்கு உதவியாக இருக்கும். அதிலும் அதனை சரியான இடங்களில் வைத்தால், அதிக செலவின்றி எளிமையாக வீட்டை அலங்கரிக்கலாம்.
காதலர் தின கொண்டாட்டத்தை நீங்கள் உங்கள் துணையுடன் கொண்டாட ஒரு அற்புதமான யோசனை. சில திட்டமிடல் மற்றும் முயற்சியுடன், உங்கள் இருவருக்கும் மறக்கமுடியாத மற்றும் அசாதாரண அனுபவத்தை உருவாக்கலாம். இந்த ஆண்டு செவ்வாய் கிழமையில் வருவதால் ஒரு பரபரப்பான வேலை நாளுக்குப் பிறகு, ஒரு அழகான இரவைத் தம்பதிகள் தேர்வு செய்யலாம். உங்கள் அன்பைக் கொண்டாடுவதற்கும், இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் பிஸியான வேலை நாள் தடையாக இருக்க வேண்டாம். சுவையான உணவை ஒன்றாகச் சமைப்பது, கைவினைப் பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் காதல் சூழ்நிலையுடன் மனநிலையை அமைப்பது போன்றவற்றின் மூலம் உங்கள் காதலை வெளிபடுத்தலாம்.
காதலர் தினத்தை வெளியில் சென்று கொண்டாடுவதன் மூலம், எல்லாம் உங்கள் விருப்பப்படி நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால் வீட்டில் இருக்கும்போது, குறைந்தபட்ச அலங்காரங்களுடன், ஒரு நல்ல நேரத்தையும் சூழலையும் நீங்கள் அனுபவிக்க முடியும் என்கிறார் WoodenStreet-ன் தலைமை நிர்வாக அதிகாரி லோகேந்திர சிங் ரனாவத். வீட்டில் உங்கள் காதலர் தினக் கொண்டாட்டங்களைச் சிறப்பாகப் கொண்டாட உதவும் சில அழகிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
குறைந்த பட்ச பொருட்களைக் கொண்டு அலங்கரிப்பது
குஷன் கவர்கள், மெழுகுவர்த்திகள், பூக்கள் மற்றும் பல அலங்காரங்களைப் பயன்படுத்துங்கள், இது காதலர் தினத்தின் மனநிலைக்கு முழு இடத்தையும் சீரமைக்க முடியும். மலர்கள், கையால் எழுதப்பட்ட குறிப்புகள் அல்லது விருப்பமான பாடல், ஆகியவை எந்த ஒரு தருணத்தையும் எந்த இடத்தில் கொண்டாடினாலும் அதை சிறப்பானதாக்குவதற்கு முக்கியமானது என்கிறார் ரனாவத்.
வீட்டை தூய்மையாக வைத்தல் : உங்கள் வீடு சுத்தமாக இருப்பதால் நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து ஒரு இனிமையான பொழுதை அனுபவிக்க முடியும். காதலர் தினத்திற்கு முன் உங்கள் வீட்டை நன்கு சுத்தம் செய்ய சிறிது நேரம் செலவிடுங்கள். வீட்டில் இயற்கை நறுமண ஸ்ப்ரேக்களை பயன்படுத்துவதன் மூலம், மன அழுத்தம், பதட்டம் மற்றும் பதட்டத்தால் தூண்டப்படும் மனச்சோர்வைக் குறைக்கும்.
சிவப்பு நிற தீம் அமைத்தல் : சிவப்பு நிறம் காதலுடன் தொடர்புடையதாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எனவே குஷன் கவர்கள், மெத்தைகள், மற்றும் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கும்போது சிவப்பு நிறத்தில் அமைக்கவும். பல ஆண்டுகளாக நீங்கள் சேகரித்த புகைப்படங்களை சிவப்பு நிற ஃப்ரேம்களில் சேகரிக்க முயற்சிக்கவும், பின்னர் அதை பிரகாசமாக்க விளக்குகளை கொண்டு அலங்கரிக்கலாம். இதனால் உங்கள் காதலியுடன் மிகவும் நெருக்கமாக நேரத்தை செலவிட முடியும்.
டைனிங் டேபிள் அலங்கரிப்பு : வீட்டில், இரவு உணவு இல்லாமல் ஒரு நாள் இரவு முழுமையடையாது, ஆனால் இதுவரை பழக்கமில்லாத ஒரு இடத்தில் உங்கள் டைனிங் அமைப்பை உருவாக்குவதே மிகச் சிறந்ததாகும். வீட்டின் பால்கனி, படுக்கையறை, மொட்டை மாடி, மாடித் தோட்டம் ஆகியவை டைனிங் டேபிள் அமைக்க சிறந்த இடங்கள் ஆகும். இந்த நாளில் நீங்கள் சாப்பிடும் நேரத்தை மிகவும் தனித்துவமாகவும், ரொமாண்டிக்காகவும் மாற்ற உதவுகிறது.
நாற்காலிகளில் அலங்காரம் : டைனிங்க் டேபிள் சேர்களை அழகிய மலர்களை கொண்டு அலங்கரிக்கலாம். டைனிங்க் டேபிளில் உங்களின் மிக நேர்த்தியான இரவு உணவுப் பொருட்களை தடையின்றி வைத்துக்கொள்ள உதவும். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த நாற்காலிகள் உங்கள் காதல் உணர்வுகளை மேம்படுத்த உதவும் என்கிறார், சரஃப் பர்னிச்சர் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரகுநந்தன் சரஃப்.
விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றிவைத்தல் : மஞ்சள் நிறத்திலான விளக்குகள் அமைதியான ஒரு சூழலை வழங்குகிறது, அதே நேரத்தில் வாசனை மெழுகுவர்த்திகள் அமைதியான மனநிலையை அதிகரிக்க வழிவகுக்கும். மெழுகு வர்த்திகள் மற்றும் விளக்குகள் ஆடம்பரமான ஹோட்டலைப் போலவே உங்கள் இடத்திற்கும் ஆடம்பரமான சூழலை வழங்குகின்றன. வெண்ணிலா, எலுமிச்சை அல்லது மல்லிகை போன்ற வாசனையுடன் கூடிய வாசனை மெழுகுவர்த்திகளைத் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் ரொமாண்டிக் எண்ணங்களை அதிகரிக்க உதவும்.