பனீர் கெட்டுப்போகாமல் இருக்க : பனீர் அடிக்கடி சமைப்பவர்கள் நிறைய ரெடிமேட் பனீர் வாங்கி ஸ்டோர் செய்வது வழக்கமாக இருக்கும் அல்லது வீட்டிலேயே செய்து வைக்கக் கூடும். எதுவாக இருந்தாலும் அது சீக்கிரமே கெட்டுப்போகிறது எனில் ஃபிரிட்ஜில் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதற்குள் போட்டு வையுங்கள். இதனால் அது கெட்டுப்போவதை தடுக்கும். அதன் சுவை மாறுவதையும் தடுக்கும்.