இப்போதெல்லாம் மழைக்காலம் வெயில் காலம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா நேரங்களிலும் வீட்டில் கொசுத் தொல்லை இருக்கிறது. இதற்கு காரணம் வீட்டின் சுற்றுசூழலாக கூட இருக்கலாம். கொசுக்கள் கடிப்பதால் உடலில் தடிப்பு, அரிப்பு பிரச்சனைகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்களும் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, மக்கள் கொசு கடியில் இருந்து தப்பிக்க பல விதமான கொசு விரட்டிகளை பயன்படுத்துவர்.
கொசுவர்த்தி சுருள், ஸ்கின் லோஷன், மின் சாதன கருவிகள் என பல வகைகள் உள்ளன. இருப்பினும் ரசாயனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட லோஷன், கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கெமிக்கல் முறையை தவிர்த்து இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட வேண்டுமானால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. நீங்கள் உங்கள் வீட்டில் சில வகை செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களை ஈசியாக விரட்டலாம். அவை என்னென்ன வகை தாவரங்கள் பற்றி என்பதை பாப்போம்.
1. சிட்ரோனெல்லா (Citronella) : இது கொசு தாவரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதன் வலுவான சிட்ரோனெல்லா வாசனை காரணமாக கொசுக்கள் வீட்டில் நுழையாது. இது பக்-ஸ்ப்ரேக்கள் மற்றும் பூச்சி-விரட்டும் மெழுகுவர்த்திகளில் ஒரு பொதுவான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த செடியை வீட்டில் நடுவதன் மூலமோ அல்லது செடியின் இலையை நசுக்கி அதன் சாற்றை தோலில் பயன்படுத்துவதன் மூலமோ கொசுவை விரட்டி அடிக்க முடியும். உங்கள் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளுக்கு அருகிலுள்ள வண்ணமயமான தொட்டிகளில் செடிகளை நட்டு வைக்கலாம்.
2. ரோஸ்மேரி (Lavender) : செடியில் உள்ள எண்ணெய் இயற்கையான கொசு விரட்டியாக செயல்படுகிறது. ரோஸ்மேரி செடி பொதுவாக 4-5 அடி உயரம் வரை வளரும். அதில் நீல நிற பூக்கள் பூக்கும். குளிர் காலத்தில் அதை வீட்டிற்குள் வைத்து வளர்க்கவும். சமையலுக்கு சுவையை சேர்ப்பதற்கும் ரோஸ்மேரி செடியை பயன்படுத்தலாம். குளிரல்லாத காலத்தில் கொசுவை கட்டுப்படுத்த இந்த செடியை உங்கள் தோட்டத்தில் வைக்கவும். ரோஸ்மேரி செடி உடனடி கொசு விரட்டியாக செயல்பட வேண்டுமானால், ரோஸ்மேரி செடியின் எண்ணெய்யை 4 சொட்டு எடுத்து, அதனை ¼ கப் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, அதனை குளிர்ந்த மற்றும் ஈரப்பதம் அல்லாத இடத்தில் சேமித்திடவும். பின் தேவைப்படும் நேரத்தில் கை மற்றும் காலைகளில் அதனை தடவிக் கொள்ளுங்கள்.
5. துளசி செடி: (Basil) : துளசி என்பது கொசு விரட்டி செடியாகும். கசக்காமலேயே நறுமணத்தை பரப்பிடும் மூலிகை செடிகளில் ஒன்று தான் துளசி. கொசுக்களை கட்டுப்படுத்த துளசியை தொட்டியில் வைத்து வீட்டின் முற்றத்தில் அதனை வளர்க்கவும். கொசுக்கள் அண்டாமல் இருக்க கசக்கிய துளசி செடியை சருமத்தின் மீது தடவிக் கொள்ளவும். உணவிற்கு சுவையளிக்கவும் துளசி செடி உதவுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்த எந்த ஒரு துளசி வகையையும் பயன்படுத்தலாம். ஆனால் லவங்கப் பட்டை துளசி, எலுமிச்சை துளசி மற்றும் பெருவியன் துளசிகளில் தான் அடர்த்தியான நறுமணம் வருவதால் அவைகள் சிறப்பாக செயல்படும்.
6. லெமன் பாம் (Lemon balm) : லெமன் பாம் செடியும் கூட கொசுக்களை அண்ட விடாது, வேகமாக வளரும் லெமன் பாம் செடி, பறந்து விரிந்து வளர போதிய இடம் தேவை. லெமன் பாம் இலைகளில் சிட்ரோனெல்லல் பொருட்கள் வளமையாக உள்ளது. பல கமர்ஷிய கொசு விரட்டிகளில் சிட்ரோனெல்லல் பயன்படுத்தப்படுகிறது. சில வகையான லெமன் பாம்களில் 38% வரையிலான சிட்ரோனெல்லல் உள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த லெமன் பாம் செடியை வீட்டின் முற்றத்தில் வளர்க்கவும். கொசு உங்களை அண்டாமல் இருக்க கசக்கிய லெமன் பாம் இலைகளை உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள்.