பேக்கிங் சோடா என்பது மினரல் எனப்படும் தாதுப்பொருள். அவை அமிலத்தன்மை உடைய பொருளுடன் இணையும் போது கார்பன் டைஆக்சைடு (கரி அமில வாயு) உருவாகிறது. பொதுவாக நீரில் கலக்கும் போது வரும் குமிழிகள் கரியமில வாயு வெளியேறுவதால் தான் ஏற்படுகிறது. பேங்கிங் சோடா என்பது சாதாரண கல்லை பொடியாக்கி செய்வது தான். இவை சுத்தப்படுத்த, கறைகளை அகற்ற பெரும் துணை புரியக்கூடியவை. அது மட்டுமல்லாமல் இவை முக்கியமாக சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
பேங்கிங் சோடா சமையலில் பயன்படுத்தினால் சற்று உவர்ப்பு, புளிப்பு கலந்த சுவை ஏற்படுகிறது. மாவு மிகவும் புளிக்காமல் இருக்க பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து எண்ணெய்யில் பொரிக்கும் பஜ்ஜி, போண்டா உள்ளட்டவை மொறுமொறுப்பாக வர பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, சுத்தப்படுத்த பேக்கிங் சோடாவை எதில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தரையில் உள்ள கரையில் இருந்து பாத்திரங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தலாம். அதன்படி இதனை பயன்படுத்தும் சில எளிய வழிகளை குறித்து காண்போம்.
1. கார்பெட்டுகளில் உள்ள கறைகளை அகற்றும்: உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் தரைவிரிப்புகளில் ஏதேனும் கறைகள் படிந்தால் அதனை அகற்ற கொஞ்சம் பேக்கிங் சோடாவே போதுமானது. சிறிதளவு பேக்கிங் சோடாவை கம்பளத்தின் கறை உள்ள பகுதியில் தெளிக்கவும். அதன்பிறகு அந்த இடத்தில் 1 கப் வெதுவெதுப்பான நீர் மற்றும் 1 தேக்கரண்டி வினிகர் கலவையைப் பயன்படுத்தி, நன்கு தேய்க்கவும். பிறகு கம்பளத்தை நன்கு அலசி அதை உலர வைக்கவும். உங்கள் கம்பளம் புதியது போல நன்றாக இருக்கும்.
2. பிளாஸ்டிக் டப்பாக்களில் உள்ள கறைகளை அகற்றும்: பெரும்பாலான வீட்டின் சமயலறையில் மசாலா பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை அடைத்து வைக்க பிளாஸ்டிக் டப்பாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நாட்களுக்கு அவற்றை பயன்படுத்துவதால் அதில் கறைகள் படிந்துகொள்ளும். அதனை நீக்க சிறிதளவு பேக்கிங் சோடா கலந்து ஒரு சுத்தமான ஸ்பான்ஜ் கொண்டு தேய்த்தால் போதுமானது. ஒருவேளை மிக கடினமான கரைகளாக இருந்தால் அதில் 4 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
3. கழிப்பறைகளை சுத்தம் செய்ய : உங்கள் வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்ய உங்களுக்கு ½ ஒரு கப் பேக்கிங் சோடா, ½ ஒரு கப் போராக்ஸ் மற்றும் 1 கப் வினிகர் மட்டுமே போதும். கறைகள் இருக்கும் பகுதியில் வினிகரை ஊற்றி, பேக்கிங் சோடா மற்றும் போராக்ஸின் கலவையை அவற்றில் தெளிக்க வேண்டும். பிறகு பிரஷ் கொண்டு டாய்லெட்டை நன்கு தேய்க்க வேண்டும். இதையடுத்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு டாய்லெட்டை பிளஷ் செய்து விடுங்கள் காட்டாயம் உங்கள் டாய்லெட் சுத்தமாக பளபளப்பாக இருக்கும்.
4. குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்யலாம் : பேக்கிங் சோடா மற்றும் பாத்திரங்களைக் கழுவ பயன்படுத்தும் திரவத்தைப் பயன்படுத்தி குளிர்சாதன பெட்டியில் படிந்து இருக்கும் கடினமான கறைகள் மற்றும் ஏதேனும் உணவு கசிவுகள், துரு கறைகள் போன்றவற்றை நீக்கலாம். மேலும் பேக்கிங் சோடா பயன்படுத்திய பிறகு அதனை வெதுவெதுப்பான நீரில் நனைத்த ஸ்பான்ஜ் கொண்டு துடைக்க வேண்டும்.
8. குளியலறையில் படியும் பூஞ்சை காளான் போன்றவற்றை நீக்கலாம்: குளியலறையில் உள்ள குளியல் தொட்டி, டைல்ஸ் மற்றும் ஷவர் போன்ற பொருட்கள் மீது படிந்திருக்கும் கறைகளை ஈரமான ஸ்பான்ஜ் மற்றும் பேக்கிங் சோடா வைத்தே சுத்தப்படுத்தலாம். அதேபோல குளியலறையின் அனைத்து மேற்பரப்புகளையும் பேக்கிங் சோடாவை வைத்தே சுத்தம் செய்யலாம்.
9. பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினை சுத்தம் செய்யலாம்: அதிக நாட்கள் பயன்படுத்திய பிறகு பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் விசித்திரமான வாசனையை பெறத் தொடங்குகின்றன. எனவே இயந்திரத்தை டியோடரைஸ் செய்ய, வாஷிங் பவுடர் கப் பாதியாக நிரம்பும் வரை பேக்கிங் சோடாவை நிரப்ப வேண்டும். பின்னர் சூடான நீரில் கழுவும் சுழற்சியை இயக்க வேண்டும். உங்கள் உடைகள் புதியதாகவும் மணம் மிக்கதாகவும் இருக்க, இந்த முறையை மாதாந்திர அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.