டாய்லெட் பிரெஷ் : பாத்ரூம் என்பது கிருமிகளின் சொர்க்கம். ஆக அங்குக் கிருமிகள் அதிகரிக்குமே தவிரக் குறையாது. அதைக் கட்டுப்படுத்த டாய்லெட் பிரெஷுகளை வைக்கக்கூடிய டப்பாவில் கொஞ்சம் வாசனை திரவியங்கள், வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் லிக்குவிடை அதில் ஊற்றுங்கள். அதற்குள் டாய்லெட் பிரெஷை முக்கி வையுங்கள்.
குப்பைத் தொட்டி பராமரிப்பு : பாத்ரூமில் வைக்கப்படும் குப்பைத் தொடியில் அதிகபட்சமாக டிஷ்யூ பேப்பர், பெண்கள் பயன்படுத்தப்படும் நாப்கின்கள், ஷாம்பூ கவர் போன்ற பாத்ரூம் பயன்பாடுகள்தான் இருக்கும். இருப்பினும் அவையும் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையே. குப்பைத்தொட்டியைத் தினமும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் சேரும் குப்பைகளை அன்றே கொட்டிவிடுங்கள்.