பாத்திரங்களை தேங்காய் நார், சாம்பல் , மண் கொண்டும் தேய்த்த காலம் போய் சோப்பு , லிக்விட் என மாறிவிட்டது. இருப்பினும் இந்த சோப்பு மற்றும் லிக்விடுகள் பாத்திரங்களை கழுவிய பின்பும் அதன் சோப்பு படிவம் தெரிகிறது. அந்த பாத்திரங்களை சமையலுக்கு அப்படியே பயன்படுத்துவது பல உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும் என மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர். எனவே அனைவரும் மீண்டும் இயற்கை வழியை பின்பற்ற முற்படுகின்றனர். அந்த வகையில் நீங்களும் பாத்திரக் கறைகளை அகற்ற சோப்பு , லிக்விடை தவிர்க்கிறீர்கள் எனில் இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க...
மர சாம்பல் : மர சாம்பல் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. அதன் உதவியுடன், பாத்திரங்களில் படிந்திருக்கும் ஒட்டும் தன்மையை எளிதாக சுத்தம் செய்யலாம். வாசனையையும் அகற்றலாம். இதைப் பயன்படுத்த, மர சாம்பலை நேரடியாக டிஷ் மீது தெளித்து, ஸ்கிரப் கொண்டு தேய்க்கவும். பின் சுடு தண்ணீரில் கழுவ பளிச்சென மாறும்.
அரிசி தண்ணீர் : அரிசி நீரில், ஸ்டார்ச் மற்றும் சிட்ரிக் அமிலம் காணப்படுகின்றன. அவை பாத்திரத்தில் உள்ள கறைகளை எளிதில் அகற்றும் . இதைச் செய்ய, கறை நிறைந்த பாத்திரங்களில் அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றி ஊற வையுங்கள். அதன் பிறகு, அரிசி நீரின் குறிப்பிட்ட வாசனையை நீக்க, பாத்திரங்களை நன்கு தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
சோடா-எலுமிச்சை : ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, அதைக் கலந்து ஸ்க்ரப்பரை இந்தக் கரைசலில் நனைத்து பாத்திரங்களில் தேய்க்கவும். அதன் பயன்பாடு சமையல் பாத்திரங்களில் இருந்து கிரீஸ் மற்றும் துர்நாற்றம் இரண்டையும் அகற்ற உதவுகிறது.