ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வெளியே செல்லும்போது செல்லப்பிராணியை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

வெளியே செல்லும்போது செல்லப்பிராணியை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

பெரும்பாலான செல்லப் பிராணிகள் அனைத்துமே எப்போதும் தங்கள் உரிமையாளர் தங்களுடனே இருக்க வேண்டும் என்று தான் விரும்பும். ஆனா சில தவிர்க்க முடியாத சூழல்களில் நமது செல்லப் பிராணிகளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு எங்கேயும் வெளியே செல்லும் நிலை உண்டாகலாம்.

 • 18

  வெளியே செல்லும்போது செல்லப்பிராணியை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

  வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அவைகள் செய்யும் அனைத்து குறும்புத்தனங்களையும் ரசித்து கொண்டு இருந்தாலும், சில சமயங்களில் அவை எல்லை மீறுவதும் உண்டு. இதனால் வீட்டில் உள்ள பொருட்களுக்கோ அல்லது செல்லப் பிராணிகளுக்கு கூட ஆபத்து நேரிடலாம்.

  MORE
  GALLERIES

 • 28

  வெளியே செல்லும்போது செல்லப்பிராணியை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

  மேலும் பெரும்பாலான செல்லப் பிராணிகள் அனைத்துமே எப்போதும் தங்கள் உரிமையாளர் தங்களுடனே இருக்க வேண்டும் என்று தான் விரும்பும். ஆனா சில தவிர்க்க முடியாத சூழல்களில் நமது செல்லப் பிராணிகளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு எங்கேயும் வெளியே செல்லும் நிலை உண்டாகலாம். இது போன்ற சமயங்களில் அவைகள் ஏதேனும் விளையாட்டாக அறியாமல் செய்யும் சில விஷயங்களினால் அவைகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வீடுகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைவதற்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே இது போன்ற சூழல்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான வழிமுறைகளை பற்றி இப்போது பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 38

  வெளியே செல்லும்போது செல்லப்பிராணியை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

  கலைப்படைய செய்து விடுங்கள்: நீங்கள் இன்று எங்கேயும் வெளியே செல்ல இருக்கிறீர்கள் என்றால், இன்றைய தினம் காலையிலேயே உங்களது செல்லப்பிராணியை பூங்காவிற்கு வாக்கிங் அழைத்துச் செல்வது மிகவும் நல்லது. மேலும் நாய்கள் பொதுவாகவே அதிகம் விளையாட விரும்பும். எனவே பூங்காவில் அவர்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை நன்றாக விளையாட விட்டு அவைகளை களைப்படையை செய்ய வேண்டும். இதுவே பூனை வளர்ப்பவர்கள், பூனைகளின் வேட்டையாடும் திறனை தூண்டி விடுவதற்காக சில விளையாட்டு சாமான்களை வாங்கி வைப்பதன், மூலம் பூனைகள் அதனுடன் விளையாடும், எனவே ஒரு கட்டத்தில் அவை மிகுந்த களைப்பாகி வேறு எந்த குறும்புத்தனமான காரியங்களிலும் ஈடுபடாது.

  MORE
  GALLERIES

 • 48

  வெளியே செல்லும்போது செல்லப்பிராணியை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

  செல்லப் பிராணிகளுக்கான விளையாட்டு பொருட்கள்: செல்லப் பிராணிகளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்கும் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவதில் இருந்து அவற்றின் கவனத்தை திசை திருப்புவதற்கும் செல்ல பிராணிகளுக்கான விளையாட்டு சாமான்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்று சந்தையில் பல்வேறு செல்லப் பிராணிகளுக்கான விளையாட்டு பொருட்கள் கிடைக்கின்றன. உணவு வகைகள் போன்ற விளையாட்டு சாமான்கள், செல்லப் பிராணிகளுக்கான பந்துகள் போன்றவை மிகவும் பிரபலமான விளையாட்டு பொருட்கள். அதைத் தவிர அட்டை பெட்டிகள், பேப்பர் பைகள் போன்றவையும் அவைகளுக்கும் மிகவும்பிடிக்கும். இவற்றை நீங்கள் வீட்டில் வாங்கி வைத்து விட்டு செல்வதின் மூலம் செல்ல பிராணிகள் இதனோடு அதிக நேரம் செலவிடும்.

  MORE
  GALLERIES

 • 58

  வெளியே செல்லும்போது செல்லப்பிராணியை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

  அவைகள் உலவும் இடங்களை பூட்டி வைக்க வேண்டும்: நீங்கள் உங்கள் செல்லப் பிராணியை தனியாக வீட்டில் விட்டுவிட்டு செல்லும்போது மிகவும் விலைமதிப்பற்ற, எளிதில் உடைய கூடிய பொருட்கள் இருக்கும் இடங்களை பூட்டி வைப்பது நல்லது. முடிந்தவரை உங்கள் செல்லப் பிராணிகள் உலவும் இடத்தை சுருக்கி, அந்த இடத்தை காலியாக வைப்பது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 68

  வெளியே செல்லும்போது செல்லப்பிராணியை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

  பொழுதுபோக்கு அம்சங்கள்: எப்போதும் நீங்கள் எங்கேயும் வெளியே செல்கிறீர்கள் என்றால் வீட்டில் உள்ள தொலைக்காட்சி அல்லது ரேடியோவை ஆன் செய்து வைத்து விட்டுச் செல்வது ஒரு நல்ல அணுகுமுறை. அதிக சத்தம் இல்லாத இசை நிகழ்ச்சியை நீகள் வரும் வரை ஓட விடலாம்..

  MORE
  GALLERIES

 • 78

  வெளியே செல்லும்போது செல்லப்பிராணியை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

  உணவு மற்றும் நீர்: நீங்கள் வெளியே செல்லும் நேரத்தில் உங்கள் நாய் மற்றும் பூனைக்கு தேவையான உணவுகளை வைத்து விட்டு செல்வது நல்லது. ஒருவேளை நீங்கள் திரும்பி வர சிறிது கால தாமதம் ஆனாலும் கூட அவைகள் பசி மற்றும் தாகத்தால் வாட கூடும் என்று கவலை இருக்காது.

  MORE
  GALLERIES

 • 88

  வெளியே செல்லும்போது செல்லப்பிராணியை வீட்டில் தனியாக விட்டு செல்கிறீர்களா..? உங்களுக்கான சில யோசனைகள்..!

  தனியாக இருப்பதை பழக்கமாக்குங்கள் : பூனை மற்றும் நாய்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட பழங்கந்தை திரும்பத் திரும்ப செய்வதில் மிகவும் ஆர்வம் உடையவை. ஆரம்பத்தில் ஒரு செல்லப் பிராணி வீட்டில் தனியாக விடுவது சற்று கடினமானதாக இருந்தாலும் போகப்போக அவை அதற்கு பழகிவிடும் எனவே ஆரம்பத்திலிருந்து முடிந்த அளவு அவைகளை வீட்டில் தனியாக இருப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES