ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு நெருங்கி வருவதால் பழைய விஷயங்களையெல்லாம் மறந்து புதிய விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்போம். அதிலும் இந்த ஆண்டாவது நம்மை வீட்டை அழகாக, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.குறிப்பாக, படுக்கையறையை எப்படியெல்லாம் அழகாக மாற்றலாம், தூய்மையாக வைத்திருக்கலாம் என்பதற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம். பெட்ரூம்மை அழகாக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இங்கே…
வண்ணங்களைத் தேர்ந்தெடுத்தல் : என்ன தான் நாம் பெரிய ரூம்களைக் கட்டியிருந்தாலும் அதற்குரிய வண்ணங்களை முறையாக தேர்ந்தெடுத்தால் தான் அது மிகவும் அழகாகத் தோன்றும். குறிப்பாக உங்களது பெட்ரூம்களுக்கு பீச், நீலம், பிங்க் போன்ற வண்ணங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். மேலும் படுக்கையில் இருந்து ஹெட்போர்டு வரை அனைத்திலும் இந்த அதிநவீன லைட் டோன்களை நீங்கள் தேர்வு செய்யலாம். பிளாட்ஃபார்ம் படுக்கைகள், நாற்காலிகள், லீனியர் கன்சோல்கள் போன்றவற்றையும் நீங்கள் தேர்வு செய்து ரூம்களை மிகவும் அழகாக்கும்.
சுவர் ஸ்டிக்கர்கள் : உங்களது பெட்ரூமையும் வீட்டின் தோற்றத்தையும் அடிக்கடி மாற்ற விரும்பினால், சுவர் ஸ்டிக்கர்கள் என்று அழைக்கப்படும் சுவர் டெக்கல்களைத் தேர்வு செய்ய வேண்டும். இதோடு ஸ்கிரீன்கள் மற்றும் தளபாடங்கள் போன்ற வண்ணமயமான விஷயங்களை நீங்கள் தேர்வு செய்தால் உங்களது ரூம்கள் மிகவும் அழகாக மாற்றும். மேலும்ஃப்ரெஸ்கோ உட்புறத்தை அடைய மர கட்டில்கள், பிரம்பு நாற்காலிகள், லாக் டேபிள்கள், மூங்கில் நிழல்கள், கைவினை விளக்குகள் போன்ற மரங்களால் ஆன பொருள்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இதோடு படுக்கையறைக்குள் உங்களுக்குப் பிடித்தமான புகைப்படங்கள், வால்பேப்பர்களை நீங்கள் ஒட்டலாம். இதோடு உட்புற தாவரங்களையும் நீங்கள் வளர்க்க முயலாம்.இது காற்றை சுத்திகரிப்பது மட்டுமில்லாமல் வளாகத்தில் ஒரு உயிரோட்டமான மற்றும் இயற்கையான பிரகாசத்தையும் நீங்கள் பெற முடியும். மேலும் ரூமில்திரைச்சீலைகள் மற்றும் ஒரு முழுச் சுவருடன் விரிந்து கிடக்கும் ஷீர்ஸ், ஒரு முழுத் தரையையும் ஆக்கிரமித்துள்ள தரைவிரிப்புகள் மற்றும் பல இடங்களின் வெவ்வேறு பகுதிகளை இணைக்கும் மற்றும் ஒருங்கிணைந்த உட்புறக் காட்சியை வரைவதன் மூலம் உங்களது ரூம்கள் மிகவும் அழகாக மாறும்..