முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வீட்டில் உள்ள ஏசி-யை நீங்களே சுத்தம் செய்யலாம்.. இதோ வழிமுறைகள்!

வீட்டில் உள்ள ஏசி-யை நீங்களே சுத்தம் செய்யலாம்.. இதோ வழிமுறைகள்!

வீட்டில் உள்ள ஏசியை நாமே சுத்தம் செய்யலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்

  • 16

    வீட்டில் உள்ள ஏசி-யை நீங்களே சுத்தம் செய்யலாம்.. இதோ வழிமுறைகள்!

    கோடைகாலம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. “அப்பப்பா என்னா வெயிலு’’ என்று சலித்துக் கொண்டே ஏசி ஸ்விட்சை ஆன் செய்யும் போது, உங்களுக்கான அதிர்ச்சி காத்திருக்கும். அதாவது, உங்கள் ஏசி நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கூலிங் தராது. ஒரு பக்கம் வெயில், மற்றொரு பக்கம் கூலிங் சரிவர கிடைக்காத ஏசி என இந்த டென்ஷன் உங்கள் உடல் சூட்டை மேலும் அதிகமாக்கிவிடும்.

    MORE
    GALLERIES

  • 26

    வீட்டில் உள்ள ஏசி-யை நீங்களே சுத்தம் செய்யலாம்.. இதோ வழிமுறைகள்!

    சரி, ஏசி டெக்னீஷியனை வரவழைத்து ஃபோன் போட்டால் என்ன நடக்கும் தெரியுமா? உங்களுக்கு முன்பாகவே உங்களை போல ஏராளமான நபர்கள் அவரை தொடர்பு கொண்டு புக்கிங் செய்து வைத்திருப்பார்கள். அவர் உடனேயெல்லாம் வர முடியாது. இன்னும் ஒன்றிரண்டு வாரங்கள் ஆகக் கூடும் என்று கூலாக பதில் சொல்வார்.

    MORE
    GALLERIES

  • 36

    வீட்டில் உள்ள ஏசி-யை நீங்களே சுத்தம் செய்யலாம்.. இதோ வழிமுறைகள்!

    டெக்னீஷியன் வரும் வரை நாம் காத்திருக்க முடியுமா? சமைத்து வைத்த உணவை பரிமாறுவதற்கு ஆள் தேடிக் கொண்டிருக்க முடியுமா? பசியென்றதும் நாமே எடுத்து வைத்து சாப்பிடுவோம் அல்லவா. அப்படித்தான், நமக்கு உடனடியாக ஏசி-யில் கூலிங் கிடைக்க வேண்டும் என்றால், நாமே களத்தில் இறங்கிவிட வேண்டியதுதான். இதை எப்படி செய்ய வேண்டும் என எதுவும் தெரியாதே என்று கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கான வழிகாட்டுதல்கள் இந்த செய்தியில் இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 46

    வீட்டில் உள்ள ஏசி-யை நீங்களே சுத்தம் செய்யலாம்.. இதோ வழிமுறைகள்!

    ஏசியை சுத்தம் செய்யும் வழிமுறைகள்..? ஏசியை சுத்தம் செய்ய களத்தில் இறங்கிய உடன் முதலில் பவர் சப்ளையை நிறுத்திவிட வேண்டும். இப்போது ஏசி பேனலை திறந்து, ஃபில்டரை அகற்றுங்கள். உங்கள் ஏசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபில்டர் இருந்தால், ஒவ்வொன்றாக கழற்றி வையுங்கள். புதிய டூத் பிரஷ் ஒன்றை எடுத்து, எவப்பரேட்டரில் உள்ள தூசுக்களை மெல்ல, மெல்ல அகற்ற வேண்டும். இதை செய்யும்போது நீங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். எவப்பரேட்டர் காயிலில் உள்ள கம்பிகள் உங்கள் கைகளை பதம் பார்த்து விடக் கூடும்.

    MORE
    GALLERIES

  • 56

    வீட்டில் உள்ள ஏசி-யை நீங்களே சுத்தம் செய்யலாம்.. இதோ வழிமுறைகள்!

    இதைத் தொடர்ந்து, சுத்தமான துணி எடுத்து உங்கள் ஏசியை சுத்தம் செய்யுங்கள். ஃபில்டர்களை ஒரு டேப் மீது வைத்து, முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். இப்போது, ஃபில்டரில் உள்ள ஈரத்தை காய விடுங்கள். பின்னர், இருந்ததை இருந்தபடி மாட்டி விடுங்கள். இப்போது ஏசி பேனலை மூடி விடுங்கள். இப்போது ஏசியை ஆன் செய்து பாருங்கள். ஜில்லென்ற கூலிங் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 66

    வீட்டில் உள்ள ஏசி-யை நீங்களே சுத்தம் செய்யலாம்.. இதோ வழிமுறைகள்!

    அவுட்டோர் யூனிட்டை சுத்தம் செய்வது எப்படி..? அவுட்டோர் யூனிட்டை சுத்தம் செய்வது கொஞ்சம் கடினமான விஷயம். முதலில் ஏசியை கண்ட்ரோல் செய்யும் ஃப்யூஸ்களை ஆஃப் செய்து விடுங்கள். ஏர் கண்டிஷனர் மேலே உள்ள உள்ள கண்டென்சர் பின்ஸ் உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றுங்கள். இதற்குப் பிறகு, ஏர்-ப்ளோவுக்கு தடையாக உள்ள எந்தவொரு தூசி அல்லது அழுக்கை சுத்தம் செய்யுங்கள்.

    MORE
    GALLERIES