முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » முதல் முறையாக இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துறீங்களா..? உங்களுக்கான கைடுலைன்..!

முதல் முறையாக இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துறீங்களா..? உங்களுக்கான கைடுலைன்..!

தற்போது இருப்பு சமையல் பாத்திரங்களில் சமைப்பது அதிகரித்து வருகிறது. நீங்களும் இருப்பு பாத்திரத்தில் சமைப்பவராக இருந்தால் நாங்கள் உங்களுக்காக சில அட்டகாசமான கிளீனிங் உதவிக்குறிப்புகளை கூறுகிறோம்.

  • 17

    முதல் முறையாக இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துறீங்களா..? உங்களுக்கான கைடுலைன்..!

    இரும்பு பாத்திரங்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழமை மாறாத வீடுகளில் பிரபலமாக காணப்படும் கேஸ்ட் அயர்ன் பாத்திரம், தற்போதுஅனைவராலும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இருப்பு பாத்திரத்தில் சமைப்பது ஆரோக்கியமானது என்றாலும், அவற்றை முறையாக பராமரிப்பது எவ்வளவு லேசான விஷயம் அல்ல. இவற்றை சுத்தம் செய்வதற்கு சிறப்பு கவனம் மற்றும் கவனிப்பு தேவைப்படுகிறது. ஏனென்றால், நாம் செய்யும் சிறிய தவறு கூட பாத்திரத்தில் துரு அல்லது நிறமாற்றத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு முறை சமையலுக்கு பின்னரும், இரும்புப் பாத்திரங்களைச் சுத்தம் செய்யப் போராடுவதில் நீங்கள் சோர்வாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு சில உதவிக்குறிப்புகளை கூறுகிறோம். அவை, உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 27

    முதல் முறையாக இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துறீங்களா..? உங்களுக்கான கைடுலைன்..!

    இரும்பு பாத்திரங்கள் ஏன் முக்கியம்? : இரும்பு சமையல் பாத்திரங்கள் வழக்கமாக உபயோகிப்பது மிகவும் நல்லது. ஏனெனில், இது இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை குறைக்க உதவுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் நன்மையை தருவதாக ஆய்வுகள் கூறுகிறது. மேலும், வார்ப்பிரும்பு கொண்டு சமைப்பது உணவில் இரும்புச் சத்தை அதிகரிக்க உதவும்.

    MORE
    GALLERIES

  • 37

    முதல் முறையாக இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துறீங்களா..? உங்களுக்கான கைடுலைன்..!

    இரும்பு சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், அதை சரியாகப் பதப்படுத்த வேண்டியது அவசியம். சமையல் பாத்திரத்தை கழுவிய பின்னர், அதை அடுப்பில் வைத்து லேசாக சூடேற்றவும். பின்னர் அந்த பாத்திரத்தில் 4 சொட்டு என்னை விட்டு பாத்திரத்தின் உள்புறம் முழுவதும் ஒரு துணியை கொண்டு தடவவும். பின்னர் அதிக வெப்பத்தில் சூடாக்கி வைக்கவும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் பாத்திரம் துரு பிடிக்காமல் இருப்பதுடன் பாத்திரத்தின் அதன் செயல்திறனை மேம்படுத்தும்.

    MORE
    GALLERIES

  • 47

    முதல் முறையாக இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துறீங்களா..? உங்களுக்கான கைடுலைன்..!

    ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு, உங்கள் இரும்பு சமையல் பாத்திரங்களை சூடான நீர் மற்றும் மென்மையான தூரிகை மூலம் சுத்தம் செய்யவும். சோப்பு அல்லது கடுமையான அலுமினிய ஸ்கிரப்பர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை சுவையூட்டிகளை அகற்றி, உங்கள் சமையல் பாத்திரங்களை துருப்பிடிக்க வைக்கும். அதற்கு பதிலாக, ஒரு தூரிகை அல்லது ஸ்பான்ஜ் மற்றும் சூடான நீர் கொண்டு உணவு துகள்களை அகற்றவும்.

    MORE
    GALLERIES

  • 57

    முதல் முறையாக இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துறீங்களா..? உங்களுக்கான கைடுலைன்..!

    உங்கள் இரும்பு சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்தவுடன், துருப்பிடிக்காமல் இருக்க அதை நன்கு உலர்த்த வேண்டியது அவசியம். ஒரு சுத்தமான டவலைப் பயன்படுத்தி உலர வைக்கவும் அல்லது சூடான அடுப்பில் வைத்து பாத்திரத்தை சூடாக்கவும். எக்காரணம் கொண்டும் உங்கள் சமையல் பாத்திரங்களை காற்றில் உலர விடாதீர்கள். ஏனெனில், ஈரப்பதம் துருப்பிடிக்க வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES

  • 67

    முதல் முறையாக இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துறீங்களா..? உங்களுக்கான கைடுலைன்..!

    உங்கள் இரும்பு சமையல் பாத்திரங்களில் விடாப்பிடியான கறை இருந்தால், அவற்றை அகற்ற சில வழிகள் உள்ளன. சமையல் பாத்திரத்தின் மேற்பரப்பில் உப்பைத் தூவி, ஈரமான துணியால் துடைத்தால் நல்ல பலன் கிடைக்கும். இல்லையெனில், பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை சேர்த்து பேஸ்ட் செய்து கறைகளில் தடவ வேண்டும். இதையடுத்து, மென்மையான தூரிகை கொண்டு
    துடைத்து, சில நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    முதல் முறையாக இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துறீங்களா..? உங்களுக்கான கைடுலைன்..!

    இருப்பு பாத்திரம் சேதம் மற்றும் துருப்பிடிப்பதைத் தடுக்க முறைப்படி சரியான சேமித்துவைக்க வேண்டியது அவசியம். துருப்பிடிப்பதை தடுக்க, ஒரு பாத்திரத்தின் மீது மற்றொரு பாத்திரத்தை ஆடுகையில் இடையில் காகித துண்டு அல்லது துணியை பயன்படுத்தவும். சமையல் பாத்திரங்களை உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டியது அவசியம். மூடியுடன் சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது ஈரப்பதத்தைப் பிடித்து துருப்பிடிக்க வழிவகுக்கும்.

    MORE
    GALLERIES