முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » துர்நாற்றம் வீசும் பாத்ரூமை 10 நிமிடத்தில் பளிச்சென மாற்ற சூப்பர் டிப்ஸ்..!

துர்நாற்றம் வீசும் பாத்ரூமை 10 நிமிடத்தில் பளிச்சென மாற்ற சூப்பர் டிப்ஸ்..!

வீட்டு பாத்ரூமை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால், கழிவறையில் தான் பல்வேறு நோய் தொற்றுகளுக்கான கிருமிகள் உருவாகின்றனர். கறைபடிந்த பாத்ரூமை பளீரென மாற்றுவதற்கான சில டிப்ஸ்யை இங்கே பார்க்கலாம்.

 • 15

  துர்நாற்றம் வீசும் பாத்ரூமை 10 நிமிடத்தில் பளிச்சென மாற்ற சூப்பர் டிப்ஸ்..!

  வீட்டு பாத்ரூமை அடிக்கடி சுத்தம் செய்வது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால், அதிகமாக தண்ணீர் புழங்கும் இடம் இது. எனவே, உப்பு நீர் காரணமாக பாத்ரூம் சீக்கிரத்தில் கறைப்படிந்து அழுக்காக தெரியும். அதே போல, சோப்பு, ஷாம்பூ போன்ற பொருட்களை பயன்படுத்தி குளிப்பதால் பாத்ரூம் தரை வழவழப்பாக மாறிவிடும். இதை சரியாக சுத்தம் செய்ய தவறினால் கழிப்பறையில் துர்நாற்றம் வீச தொடங்கும். இது சுகாதாரக் கேடும் கூட. பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. வீட்டு பாத்ரூமை எளிமையாக சுத்தம் செய்யும் சில முறைகள் பற்றி நாங்கள் இங்கே உங்களுக்கு கூறுகிறோம்.

  MORE
  GALLERIES

 • 25

  துர்நாற்றம் வீசும் பாத்ரூமை 10 நிமிடத்தில் பளிச்சென மாற்ற சூப்பர் டிப்ஸ்..!

  டால்கம் பவுடர் : உங்க வீட்டுக்கழிப்பறையில் அதிக துர்நாற்றம் வீசினால், நீங்கள் டால்கம் பவுடராய் பயன்படுத்தலாம். டால்கம் பவுடரை கழிப்பறையில் போட்டு சிறிது நேரம் அப்படியே விடவும். பின்னர், பாத்ரூமை ஃப்ளஷ் செய்யவும். இந்த முறையை 3 முதல் 4 நாட்களுக்கு செய்ய வேண்டும். இப்படி செய்வதால் துர்நாற்றம் வீசுவது குறையும்.

  MORE
  GALLERIES

 • 35

  துர்நாற்றம் வீசும் பாத்ரூமை 10 நிமிடத்தில் பளிச்சென மாற்ற சூப்பர் டிப்ஸ்..!

  டூத்பேஸ்ட் : பாத்ரூமில் இருக்கும் குழாய், வாஷ் பேசின் போன்றவற்றை சுத்தம் செய்ய வாரம் ஒருமுறை, பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்டை ஸ்க்ரப் போல் பயன்படுத்தலாம். பேஸ்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவையும் சேர்த்து சுத்தம் செய்யலாம். இது குழாயை புதியது போல மாற்றும்.

  MORE
  GALLERIES

 • 45

  துர்நாற்றம் வீசும் பாத்ரூமை 10 நிமிடத்தில் பளிச்சென மாற்ற சூப்பர் டிப்ஸ்..!

  செய்தித்தாள்களை பயன்படுத்துங்க : பாத்ரூம் கண்ணாடியை சுத்தம் செய்ய தண்ணீர் மற்றும் பழைய செய்தித்தாள்களை மட்டுமே பயன்படுத்தினால் போதும். அதை மிக எளிதாக சுத்தம் செய்யலாம். அதற்கு, கண்ணாடி மீது தண்ணீர் தெளித்து, செய்தித்தாள் மூலம் நன்கு தேய்த்து சுத்தம் செய்யவும். இப்படி செய்தால் பாத்ரூம் கண்ணாடி பளீச்சென்று மாறிவிடும்.

  MORE
  GALLERIES

 • 55

  துர்நாற்றம் வீசும் பாத்ரூமை 10 நிமிடத்தில் பளிச்சென மாற்ற சூப்பர் டிப்ஸ்..!

  சர்ப் தூள் : பாத்ரூமில் இருக்கும் பக்கெட்டை சுத்தம் செய்வது மிக மிக சுலபம். அதற்கு, துணி துவைக்க பயன்படுத்தும் சர்ப் தூளுடன் இனிப்பு சோடா மற்றும் சிறிதளவு வினிகர் சேர்த்து அதை கொண்டு பக்கெட்டை நன்கு தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் பக்கெட்டில் இருக்கும் நீர்க்கறைகள் முதல் பூஞ்சை வரை அனைத்தும் மிக எளிதாக சுத்தமாகிவிடும்.

  MORE
  GALLERIES