நமக்கு வயதாகும் போது முடியெல்லாம் நரைத்து விடும் என்பது இயல்பான ஒன்று தான். ஆனால், இன்றைய வாழ்வியல் சூழல்களால் எல்லோருக்குமே 20, 30 வயதுகளில் முடி நரைக்கத் தொடங்கி விடுகிறது. அத்தகைய சூழலில், நமக்கு வரம் போல அமைந்தது தான் ஹேர் டை ஆகும். இவை நம் வாழ்வுக்கு புது வண்ணத்தை கொடுக்கின்றன என்பதோடு மட்டுமல்லாமல், நமது தோற்றத்தையும் மாற்றி விடுகிறது.
மவுத் வாஷ் மற்றும் டூத் பிரஷ் : பழைய டூத் பிரஷ்களை பயன்படுத்தி உங்கள் டவலில் ஒட்டியிருக்கும் ஹேர் டையை நீக்க முடியும். உங்கள் டவலில் ஹேட் டை கறை படிந்திருக்கும் இடத்தின் மீது கொஞ்சம் மவுத் வாஷ் தடவவும். அதன் மீது பழைய டூத் பிரஷ் வைத்து அழுத்தி தேய்க்கவும். இன்னும் கொஞ்சம் மவுத் வாஷ் சேர்த்து, அப்படியே ஊற விடவும். ஒரு 5 நிமிடத்திற்குப் பிறகு மீணடும் பிரஷ் வைத்து தேய்த்தால் புத்தம் புதிய டவலாக மாறிவிடும்.
வினிகர் மற்றும் டிடர்ஜண்ட் தூள் : கறையைப் போக்குவதற்கு இதற்கு முன்பாக நீங்கள் வினிகர் மற்றும் டிடர்ஜண்ட் தூள் பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லையா? அப்படியானால், ஒரு பக்கெட்டில் இரண்டு கப் வினிகர் ஊற்றி, டிடர்ஜண்ட் பவுடரும் சேர்த்து அதில் உங்கள் டவலை ஊற வைக்கவும். சிறிது நேரம் கழித்து, துவைத்தால் கறை நீங்கிவிடும்.
ஹேர்ஸ்பிரே : உங்கள் ஹேர்ஸ்டைல் செட் செய்வதற்காக நீங்கள் ஹேர்ஸ்பிரே பயன்படுத்துகிறீர்கள். அதையே வேறு முறையில் பயன்படுத்தி கொள்ளலாம். ஹேர்ஸ்பிரே எடுத்து, அதை கறை படிந்த இடத்தில் ஸ்பிரே செய்யவும். ஹேர்ஸ்பிரேயில் கொஞ்சம் ஆல்க்கஹால் மற்றும் இதர இரசாயனங்கள் இருப்பதால், கறையை அது இலகுவாக மாற்றும். ஆகவே, இந்த ஸ்பிரே தெளித்து 5 நிமிடங்கள் ஊறிய பிறகு, உங்கள் டவலை அலசி காய வைக்கலாம். இது அனைத்து விதமான கறைகளையும் போக்கி, புதியதை போல டவலை மாற்றிவிடும்.