ஃபிரிட்ஜ் என்பது அனைவரின் வீட்டிலும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. அதன் முக்கியத்துவத்தை அறிந்த பலரும் அதை சரியான முறையில் பராமரிப்பதும் முக்கியம் என்பதை அறிய தவறுகின்றனர். எனவேதான் ஃபிரிட்ஜ் வெடிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே இனிமேலாவது விழிப்புடன் இருக்க இந்த விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
ஃபிரிட்ஜ் பராமரிப்பில் கண்டென்சர் காயிலை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். தூசி அடைத்திருந்தாலும் ஃபிரிட்ஜின் செயல்பாடு குறையும். இதனால் கம்பிரசர் அதிக சூடாகி வெப்பத்தை வெளியேற்றும். இதை அறிய ஃபிரிட்ஜின் அருகில் சென்றாலே அதன் வெப்பத்தை உணரலாம். அப்படி உங்கள் ஃபிரிட்ஜிலும் அதிக வெப்பம் வருகிறது எனில் உடனே கண்டென்சரை பரிசோதனை செய்து மாற்றுவது அல்லது சுத்தம் செய்வது அவசியம்.