முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சூப்பர் மார்கெட்டில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட இந்த உணவுப்பொருட்களை வாங்கிடாதீங்க...

சூப்பர் மார்கெட்டில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட இந்த உணவுப்பொருட்களை வாங்கிடாதீங்க...

வீட்டில் இருக்கும் பல உணவுகள் மற்றும் உணவு தயாரிக்க பயன்படும் பொருட்களை நாம் ஃபிரிட்ஜை பயன்படுத்தி, ரெஃப்ரிஜிரேட் செய்கிறோம். ஆனால் உணவாக பயன்படுத்தும் பல பொருட்களை கூலிங் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இதே நிலை தான் சூப்பர் மார்க்கெட்களில் நாம் வாங்கும் சில உணவுகளுக்கும்.

 • 17

  சூப்பர் மார்கெட்டில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட இந்த உணவுப்பொருட்களை வாங்கிடாதீங்க...

  நமது அனைவரின் வீடுகளிலும் தவறாமல் முக்கியமாக இருக்கும் பொருளாக இருந்து வரும் ஒன்று ஃபிரிட்ஜ். உணவுகளை சேமிப்பதற்காக மற்றும் அவற்றை ஃபிரெஷ்ஷாக வைத்திருப்பதற்காகவும் ஃபிரிட்ஜ்-ஆனது பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் இருக்கும் பல உணவுகள் மற்றும் உணவு தயாரிக்க பயன்படும் பொருட்களை நாம் ஃபிரிட்ஜை பயன்படுத்தி, ரெஃப்ரிஜிரேட் செய்கிறோம். ஆனால் உணவாக பயன்படுத்தும் பல பொருட்களை கூலிங் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இதே நிலை தான் சூப்பர் மார்க்கெட்களில் நாம் வாங்கும் சில உணவுகளுக்கும்.

  MORE
  GALLERIES

 • 27

  சூப்பர் மார்கெட்டில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட இந்த உணவுப்பொருட்களை வாங்கிடாதீங்க...

  சூப்பர் மார்க்கெட்டில் பல பொருட்களை ரெஃப்ரிஜிரேட் செய்து விற்கிறார்கள். ஏனென்றால் இது குறிப்பிட்ட உணவுகளின் ஊட்டச்சத்து தரத்தை வெகுவாக குறைக்கும் அல்லது கெட்டுப்போகும் செயல்முறையை துரிதப்படுத்தும். நீங்கள் முற்றிலும் வாங்காமல் தவிர்க்க வேண்டிய உறைந்த அல்லது அதிகம் குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட் ணவுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 37

  சூப்பர் மார்கெட்டில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட இந்த உணவுப்பொருட்களை வாங்கிடாதீங்க...

  ஸ்ட்ராபெர்ரி: சத்துக்கள் நிறைந்த மற்றும் சுவையான ஸ்ட்ராபெர்ரிக்களை ஊட்டச்சத்து மதிப்பு குறையாமல் சாப்பிட வேண்டும் என்றால் அவற்றை அறை வெப்பநிலையில் சேமித்து வைத்து சாப்பிடுவது தான் சிறந்த வழி. ஆண்டு முழுவதும் ஸ்ட்ராபெர்ரிக்கள் கிடைத்தாலும் சீசன் காலத்தில் மட்டும் இவற்றை வாங்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சீசன் நேரம் தவிர பிற நேரங்களில் ஃபிரிட்ஜில் வைத்து விற்கப்படும் ஸ்ட்ராபெர்ரிக்களை வாங்குவது ஆரோக்கியத்திற்கு பெரியளவில் பலனளிக்காது. ஏனென்றால் ஸ்ட்ராபெர்ரிகள் இயற்கையில் நுண்துளைகள் கொண்டவை, இவற்றை உறைய வைக்கும் போது அதிலிருக்கும் நல்ல சத்துக்கள் தானாகவே சிதைந்துவிடும்.

  MORE
  GALLERIES

 • 47

  சூப்பர் மார்கெட்டில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட இந்த உணவுப்பொருட்களை வாங்கிடாதீங்க...

  ஹெர்ப்ஸ்: கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்ற மூலிகைகள் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை செய்கின்றன என்பது நமக்கு தெரியும். ஆனால் இவை வாடாமல் இருக்க சில சூப்பர் மார்க்கெட்களில் ஃபிரிட்ஜில் வைத்து விற்கிறார்கள். இதனால் அவற்றின் சுவை குறைவதோடு, நமக்கு ஆளாகும் ஊட்டச்சத்துக்களின் தரமும் கணிசமாக குறைகிறது. இவை விரைவில் அழுகி போகும் அபாயம் இருப்பதால் ஃபிரிட்ஜில் வைக்கும் போது கூட சில சேர்க்கைகள் சேர்த்தே வைக்கப்படுகின்றன. எனவே ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கப்பட்டு விற்கப்படும் இது போன்ற ஆரோக்கிய மூலிகைகளை வாங்காதீர்கள்.

  MORE
  GALLERIES

 • 57

  சூப்பர் மார்கெட்டில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட இந்த உணவுப்பொருட்களை வாங்கிடாதீங்க...

  நட்ஸ் & ட்ரை ஃப்ரூட்ஸ்: இவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. அறை வெப்பநிலையில் வைத்து இவற்றை சேமித்தாலே சத்துக்கள் சிறப்பாக பாதுகாக்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 67

  சூப்பர் மார்கெட்டில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட இந்த உணவுப்பொருட்களை வாங்கிடாதீங்க...

  மஷ்ரூம்கள்: குறைந்த கலோரியோடு அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்ட காளான்களை ஃபிரிட்ஜில் வைத்தால் அவை எளிதில் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 77

  சூப்பர் மார்கெட்டில் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட இந்த உணவுப்பொருட்களை வாங்கிடாதீங்க...

  ப்ரோக்கோலி: ஊட்டச்சத்து மிக்க காய்கறியாக கருதப்படும் ப்ரோக்கோலியை ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் அதை வாங்குவதை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்படும் போது ப்ரோக்கோலி இயற்கை சுவை மற்றும் அமைப்பை இழப்பதோடு அதன் ஊட்டச்சத்து மதிப்பை கணிசமாக குறைக்கிறது. மேலும் ப்ரோக்கோலியை ஃபிரிட்ஜில் வைப்பது அதன் மேல் பூஞ்சை வளர வழிவகுக்கும்.

  MORE
  GALLERIES