தைப்பொங்கல் திருநாளின் மறுநாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு தாயை போல பால் கொடுப்பதிலும் மனித குலத்துடன் ஒன்றி இருப்பதாலும் உழவர்களுக்கு கைகொடுத்து காப்பதனாலும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கு விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, விருந்தளித்து பூஜை செய்து வழிபடுவர். முக்கியமாக வீடுகளுக்கு முன் மாடுகளை பெருமைப்படுத்தும் விதமாக கோலம் போட்டு தங்களின் வீட்டு வாசல்களை அலங்கரிப்பர். பானை கோலம் கூட எளிதாக போட்டு விடலாம். ஆனால் மாட்டுக் கோலம் பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் எளிமையாக போட்டு விடலாம். அப்படி எளிமையாக போடுவதற்கு பல எளிய ரங்கோலி டிசைன்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக.