முகப்பு » புகைப்பட செய்தி » ஏ.சி, பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான லோன் ஆப்ஷன்ஸ் என்னென்ன? 4 சூப்பர் வழிகள்..!

ஏ.சி, பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான லோன் ஆப்ஷன்ஸ் என்னென்ன? 4 சூப்பர் வழிகள்..!

பட்ஜெட் பிரச்சனையால், ஏ.சி மற்றும் பிரிட்ஜ் வாங்கும் கனவு தள்ளிப்போகிறது என்றால், கவலையை விடுங்கள். ஸ்மார்ட்டாக கடன்பெற்று உங்களின் ஆசையை நிறைவேற்றிகொள்ளலாம்.

  • 16

    ஏ.சி, பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான லோன் ஆப்ஷன்ஸ் என்னென்ன? 4 சூப்பர் வழிகள்..!

    கோடைகாலம் தொடங்கிவிட்டதால் பிரிட்ஜ், ஏ.சி பயன்படுத்துவது அதிகரிக்கும். கடந்த காலங்களைவிட தற்போது வெயில் கொளுத்துவதால் பலரும் ஏ.சி வாங்க விருப்பப்படுகின்றனர். கொரோனா 2வது அலை வேகமாக பரவுவதால் மக்கள் மீண்டும் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், பிரிட்ஜ் மற்றும் ஏ.சிக்கு சந்தைகளில் நல்ல டிமாண்ட் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    ஏ.சி, பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான லோன் ஆப்ஷன்ஸ் என்னென்ன? 4 சூப்பர் வழிகள்..!

    சீசன் நேரத்தில் நீங்கள் வாங்க செல்லும்போது, எதிர்பார்க்கும் தள்ளுபடிகள் கிடைப்பது வாய்ப்புகள் குறைவு. பட்ஜெட் பிரச்சனையால், ஏ.சி மற்றும் பிரிட்ஜ் வாங்கும் கனவு தள்ளிப்போகிறது என்றால், கவலையை விடுங்கள். ஸ்மார்ட்டாக கடன்பெற்று உங்களின் ஆசையை நிறைவேற்றிகொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    ஏ.சி, பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான லோன் ஆப்ஷன்ஸ் என்னென்ன? 4 சூப்பர் வழிகள்..!

    பர்சனல் லோன் : மாத ஊதியம் வாங்குபவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் பர்சனல் லோனை தேர்தெடுத்து, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆண்டுக்கு 9 முதல் 16 விழுக்காடு வட்டி விகிதத்தில் பர்சனல் லோன் வழங்கப்படுகிறது. உங்களின் கிரெடிட் கார்டு ஸ்கோர், வேலை மற்றும் ஊதியம் ஆகியவற்றைப் பொறுத்து வங்கிகள் லோன் கொடுக்க தயாராக இருக்கின்றன. அதிகபட்சம் 5 வருட வேலிடிட்டியில் 30 லட்சம் ரூபாய் வரை பர்சனல் லோன் கொடுக்க வங்கிகள் தயாராக இருக்கின்றன. ஒருசில வங்கிகள் 7 ஆண்டுகள் காலவகாசம் கொடுக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 46

    ஏ.சி, பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான லோன் ஆப்ஷன்ஸ் என்னென்ன? 4 சூப்பர் வழிகள்..!

    கிரெடிட் கார்டு இ.எம்.ஐ : வணிகர்கள், இ-காமர்ஸ் நிறுவனங்கள், சில்லறை வியாபாரிகள் கிரெடிட் கார்டு வழங்குபவர்களுடன் இணைந்து சிறப்புத் தள்ளுபடி மற்றும் மாதாந்திர தவணை முறையில் பணத்தை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. கிரெடிட் கார்டு வழங்குபவர்களும் வணிகர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி நோ-காஸ்ட் இ.எம்.ஐ சலுகைகளை கொடுக்கின்றனர். உங்களிடம் இருக்கும் கிரெடிட் கார்டு வங்கியைப் பொறுத்து, அந்த வங்கிக்கு சலுகை வழங்கும் நிறுவனத்தில் பொருட்களை எடுக்கலாம். அப்போது, சிறப்பு தள்ளுபடி பெறுவதுடன், காஷ்பேக் ஆஃபர்களும் உங்களுக்கு கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 56

    ஏ.சி, பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான லோன் ஆப்ஷன்ஸ் என்னென்ன? 4 சூப்பர் வழிகள்..!

    நுகர்வோர் தவணைக் கடன் : சில கடைகள் மற்றும் வியாபாரிகள் நிதி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தவணைக் கடன்களை கொடுக்கின்றன. வீட்டு உபயோகப் பொருட்களை வைத்திருக்கும் கடைகள் கடனுக்கு பொருட்களை கொடுத்துவிட்டு, வார அடிப்படையில் பணத்தை பெற்றுக்கொள்ளவும் தயாராக இருகின்றனர். பிரிட்ஜ் மற்றும் ஏ.சி வாங்குவதற்கு போதுமான நிதி இல்லாதபோது நீங்கள் இந்த ஆப்சனை தேர்ந்தெடுக்கலாம். இதில் இருக்கக்கூடிய முக்கிய விஷயம் என்னவென்றால், வார கடனில் கொடுப்பவர்கள் கூடுதல் பணம் வசூலிக்கிறார்களா? என்பதை முன்பே கேட்டுத் தெரிந்துகொண்டு, உரிய தொகையை மட்டும் வசூலிக்கும் கடைகளை அணுகுவது நல்லது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இல்லாதவர்களுக்கு இந்த கடன் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 66

    ஏ.சி, பிரிட்ஜ் வாங்கப்போறீங்களா? உங்களுக்கான லோன் ஆப்ஷன்ஸ் என்னென்ன? 4 சூப்பர் வழிகள்..!

    கிரெடிட் கார்டு லோன் : கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாதம் செலவு செய்ய அனுமதிக்கப்பட்ட தொகை, அவர்கள் சரியாக திருப்பி செலுத்துகிறார்களா? என்பதைப் பொறுத்து சில வங்கிகள் கிரெடிட் கார்டு லோன் வழங்குகின்றனர். லோனுக்கும், அனுமதிக்கப்பட்ட மாதாந்திர தொகைக்கும் சம்பந்தம் இருக்காது. நீங்கள் விருப்பப்பட்டால் கிரெடிட் கார்டு வழியாக லோன் பெற்று, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். கிரெடிட் கார்டு லோன் 15 விழுக்காடு வட்டியில் கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறித்து நீங்கள் தெளிவாக இருந்தீர்கள் என்றால், லோன் வாங்குவதற்கு தடையேதும் இல்லை.

    MORE
    GALLERIES