சிரிக்கும் புத்தர் : ஆங்கிலத்தில் 'லாஃபிங் புத்தா' என்று சொல்ல கூடிய குபேரர் போன்ற பொம்மையை பலர் தங்களது டேபிளில் வைப்பது வழக்கம். ஆம், இது உண்மையில் சிறப்பாக செயல்படுவதாக பலர் நம்புகின்றனர். இந்த சிரிக்கும் புத்தரை நமது பணம் இருக்க கூடிய டேபிள் அல்லது வேறு அறைகளில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும். மேலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த சிலையை தினமும் காலையில் எழுந்த உடன் அதன் வயிற்றை துடைத்தால் போதும், நல்லதே நடக்கும். மேலும் இதை தென்மேற்கு மூலையில் வைக்கலாம்.
டிராகன் சிலை : ஃபெங் சுய் என்கிற சீன முறையால் அங்கீகரிக்கப்பட்ட தங்க டிராகனை வீடுகள் அல்லது கடைகளில் வைத்து கொள்ளலாம். இதை புத்தருக்கு அருகில் அல்லது அதன் எதிர் பக்கத்தில் வைக்கவும். ஃபெங் சுய் மற்றும் சீன கலாச்சாரத்தின் படி இந்த டிராகனானது அதிர்ஷ்டமான ஒன்றாகும். மற்றும் இது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இது உங்களுக்கு பல வெற்றிகளை தரும். எனவே ஒரு நல்ல சிலையை வாங்கி வையுங்கள்.
சிங் நாணயங்கள் : வெண்கல நிறத்தில் சதுரமாக வெட்டப்பட்ட மையத்துடன் வட்ட நாணயங்களை பணம் அதிகரிக்க பல இடங்களில் பயன்படுத்துவார்கள். இது சிவப்பு பட்டு அல்லது கயிற்றில் கட்டப்பட்டிருக்கும். இந்த நாணயங்கள் அதிர்ஷ்டத்தை தர கூடியவை. இதிலுள்ள வட்ட வடிவமானது சொர்க்கத்தைக் குறிக்கிறது மற்றும் சதுர வெட்டானது பூமியை குறிக்கிறது. இதை உங்கள் டேபிள் அல்லது கதவு கைப்பிடியில் தொங்க விடலாம்.