தினமும் கொளுத்தும் வெயில் தாங்க முடியாத எரிச்சலையும், வெக்கையையும் உண்டாக்குகிறது. குறிப்பாக மாலையில் இருக்கும் வெப்பத்தின் தாக்கம் வியர்வையிலேயே நம்மை குளிப்பாட்டி விடுகிறது. இதுபோன்ற சூழலில் நிம்மதியான உறக்கத்திற்கு எங்கே போவது..? அதுவும் நாள் முழுவதும் களைத்து சோர்வாக இருப்போருக்கு இது மிகவும் கடினமான சூழ்நிலைதான். இதற்காகத்தான் பலரும் வீட்டில் ஏசியை அத்தியாவசியப் பொருளாக வைத்திருக்கின்றனர்.
ஆனால் பலருக்கும் இது சாத்தியமில்லாத பொருளாதார சிக்கல் இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையாக உள்ள மிடில் கிளாஸ் குடுப்பத்தினருக்கு ஏர் கூலர் கூட வாங்க முடியாத சூழல் இருக்கலாம். இருப்பினும் நீங்கள் கவலையே பட வேண்டாம். உங்களுக்கு ஏசி தரத்தில் குளுகுளு காற்று வேண்டுமெனில் இந்த டிப்ஸை தினமும் இரவு ஃபாலோ பண்ணுங்க..