இப்போது நமக்கு லாக்டவுன் என்பது புதிதல்ல. உடலளவிலும், மனதளவிலும் இவற்றை சமாளிக்கும் ஆற்றலை கடந்த இரண்டு ஆண்டின் அனுபவம் நமக்கு அளித்திருக்கிறது. இந்த வருடமும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதன் காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கும் மற்றும் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு இப்போதே தயாராகிவிடுங்கள். உங்கள் ஃபிரிட்ஜில் சேமித்து வைக்க வேண்டிய அத்தியாவசியமான 10 உணவுப் பொருட்களை பற்றி பார்ப்போம்.
ரெடிமேட் உணவுகள் மற்றும் ஊறுகாய் : ரெடிமேட் மிக்ஸ் வகைகளை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் அவ்வப்போது தேவைக்கு சுலபமாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும் இந்த ரெடிமேட் மிக்ஸ் வகைகள் உதவலாம். ஊறுகாயும் அவசரத் தேவைக்கு உதவும் அத்தியாவசிய உணவுப் பொருளாகும்