வாடகை வீட்டில் நாம் பொதுவாக நினைப்பதை எல்லாம் செய்து விட முடியாது. ஹவுஸ் ஓனர் ஆணி அடிக்கக் கூடாது என்று ஏகப்பட்ட நிபந்தனைகள் உடன் தான் நமக்கு வீட்டை வாடகைக்கு விடுவார். அப்படி இருக்க, நாம் நினைத்தவாறு நம் வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பது சற்று சிரமத்துக்குரிய விஷயம் தான். ஹவுஸ் ஓனர்கள் தங்கள் வீட்டு சுவர்கள் சேதமாகிவிடக் கூடாது என்று தான் இத்தனை நிபந்தனைகள் விதிக்கின்றனர். அதனால் சேதம் எதுவும் விளைவிக்காமல் நம்மால் சுவர்களை அழகுபடுத்த முடியும் என்று இருந்தால், நாம் அதனை முயற்சி செய்து பார்க்கலாமே.
வால் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்துதல் : வால் ஸ்டிக்கர்கள் வெறும் டீனேஜ் பசங்களுக்காக மட்டும் இல்லை. இதனை வைத்து நீங்கள் உங்கள் சுவர்களை அழகாக்கலாம். வின்டேஜ் ஃபீல் கொடுக்கக் கூடிய உங்களுக்குப் பிடித்த ஸ்டிக்கர்களை தேர்வு செய்து சுவரில் ஒட்டுங்கள். ஏதாவது தீம் செய் செய்து அதற்கேற்றார் போல உங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் சுவரை ஸ்டிக்கர் கொண்டு அலங்கரிக்கலாம்.
கலை நயம் மிகுந்த பெயிண்டிங் போன்றவற்றை சுவரில் மாட்டுதல் : கலை நயம் மிகுந்த பெயிண்டிங், உங்கள் குழந்தைகளின் கைவண்ணம், பென்சில் ஷேடிங் போன்றவை உங்கள் சுவருக்கு அழகு சேர்ப்பதோடு நம் மனதிற்கு இதமளிக்கும். உங்கள் வீட்டின் உரிமையாளர் ஆணி அடிக்க வேண்டாம் என்று கூறி இருந்தால், நீங்கள் ஆணி அடிப்பதைத் தவிர்த்து வேறு ப்ரீ ஸ்டேண்டிங் டெக்கர்களைத் தேர்வு செய்து அழகுபடுத்தலாம்.
கிராமிய தோற்றத்தை உருவாக்க கூடைகள் போன்றவற்றை பயன்படுத்துதல் : நெய்யப்பட்ட கூடைகள் அல்லது தட்டுகள் முதலியவை வீட்டு அலங்காரத்திற்கு ஏற்ற பொருட்களாகும். வெவ்வேறு அளவுகளிலான கூடைகளை பயன்படுத்தினால் அசத்தலாக இருக்கும். நீங்கள் பழமையை ரசிப்பவராக இருந்தால், உலர்ந்த பூக்கள் கொண்ட பூந்தொட்டி வீட்டின் அலங்காரத்திற்கு பொருத்தமாக இருக்கும்.
செடிகளை பயன்படுத்துதல் : தற்போது பலரும் தங்கள் வீட்டை அழகுபடுத்த செடிகளை பயன்படுத்துகின்றனர். இது அழகு சேர்ப்பதோடு, பல நன்மைகளை வழங்குகிறது. வீட்டில் பச்சை பசேல் என்று செடிகள் இருந்தால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். வீட்டில் வைக்கும் வகையில் தற்போது பல இண்டோர் வகைகள் விற்கப்படுகின்றன. அவற்றை மேசையில் அடுக்கி வைக்கலாம், அல்லது தொங்க விடலாம். உங்கள் சுவருக்கு ஒரு தனி அழகு சேரும். பார்ப்பவர்களை ஈர்ப்பது செடிகளுக்கு சுலபம்.
பேப்பர் ஃபேன்ஸ் அல்லது போல்கா டாட்ஸ் பயன்படுத்துதல் : பேப்பர் ஃபேன்ஸ் அல்லது போல்கா டாட்ஸ் பயன்படுத்துதல் என்பது உங்கள் வீட்டை அலங்கரிக்க ஒரு மிகச் சிறந்த யோசனை ஆகும். வீட்டின் சுவரில் வண்ண மயமான பேப்பர் ஃபேன்களை டிஸ்பிளே செய்யலாம். கடைகளில் கிடைக்கும் போல்கா டாட்ஸ் ஸ்டிக்கர்களைக் கூட வாங்கி ஒட்டலாம்.