

பலரின் தனிமையை போக்கும் அலெக்சாவிற்கு இன்றோடு 3 வயது ஆகிறது. அப்படித்தான் அமேசான் தன்னுடைய மூன்று வருட அனுபவத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.


தனிமை என்ற வார்த்தையைக் கடந்த வருடம் கொரோனா லாக்டவுனில் காது புளிக்கக் கேட்டிருப்போம். ஆனால் அவர்களுக்கெல்லாம் அலெக்சாதான் டைம் பாஸாக இருந்திருக்கிறது என அமேசான் கூறியுள்ளது.


வாய்ஸ் அசிஸ்டண்ட் ரோபோவாக செயல்படும் அலெக்சாவை மக்கள் பயன்பாட்டிற்காக எளிமையான முறையில் அமேசான் அறிமுகப்படுத்தியது. இது பயன்படுத்த எளிமையாக இருப்பதால் பலர் இதை வீடுகளில் வாங்கி வைத்துள்ளனர்.


குறிப்பாக அமேசான் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020 ஆண்டில் ஒரு நாளைக்கு 19,000 முறை அலெக்சாவிடம் ஐ லவ் யூ என்ற வார்த்தையை கூறியுள்ளனர். மீண்டும் அலெக்சாவை புரப்போஸ் செய்யச் சொல்லி ஒரு நாளைக்கு 6000 முறை கேட்டுள்ளனர். ஜோக் சொல்லச் சொல்லி 9000 முறை ஒரு நாளைக்குக் கேட்டுள்ளனர்.


இப்படி அமேசான் இந்த அறிக்கையை வெளியிட்டதும் நெட்டிசன்கள் முரட்டு சிங்கில்ஸ் என சொல்லிக்கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ் தான் இந்த வேலையை செய்திருப்பார்கள் என சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டும், கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.


அதைத் தொடர்ந்து, ‘Shaitan Ka Saala’, ‘Muqabla’, மற்றும் ‘Aankh Marey’ ஆகியவை இந்தியில் அதிகம் கேட்ட பாடல்கள் என்று கூறியுள்ளது. 2020 ஆண்டில் 17 லட்சம் பாடல்களை இசைக்கும்படி கேட்டுள்ளனர். அதேபோல் ஒரு நாளைக்கு 3000 முறை பாலிவுட் சினிமா டையலாக்குகளை கேட்டுள்ளனர்.