முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வீட்டில் பயன்படுத்தாத பழைய பெட்ஷீட்டுகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..! 

வீட்டில் பயன்படுத்தாத பழைய பெட்ஷீட்டுகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..! 

தற்போது பலரும் பிளாஸ்டிக்கை தவிர்த்து வருகின்றனர். நீங்களும் கோ கிரீன் பிரச்சாரத்தை ஆதரிக்கிறீர்கள் எனில் வீட்டில் இருக்கும் பழைய பெட்ஷீட்டுகளில் துணிப்பை தைக்கலாம்.

 • 17

  வீட்டில் பயன்படுத்தாத பழைய பெட்ஷீட்டுகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..! 

  பலருடைய வீட்டில் பழைய பெட்ஷீட்டுகள் தூக்கி எறிய மனமில்லாமல் மூட்டைக் கட்டி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். அதை என்ன செய்வதென்றும் தெரியாது. அப்படி நீங்களும் பல பெட்ஷீட்டுகளை வைத்திருக்கிறீர்கள் எனில் உங்களுக்கான அருமையான டிப்ஸுகள் இதோ...

  MORE
  GALLERIES

 • 27

  வீட்டில் பயன்படுத்தாத பழைய பெட்ஷீட்டுகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..! 

  துணிப் பை செய்யலாம் : தற்போது பலரும் பிளாஸ்டிக்கை தவிர்த்து வருகின்றனர். நீங்களும் கோ கிரீன் பிரச்சாரத்தை ஆதரிக்கிறீர்கள் எனில் வீட்டில் இருக்கும் பழைய பெட்ஷீட்டுகளில் துணிப்பை தைக்கலாம். காய்கறி வாங்கிவர, மளிகை சாமான் போன்ற பொருட்கள் வாங்கி வர அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  வீட்டில் பயன்படுத்தாத பழைய பெட்ஷீட்டுகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..! 

  சுத்தம் செய்யும் துணி : இது பழைய யோசனை என்றாலும் சிலருக்கு தற்போது அது நினைவில் தோன்றாமல் இருக்கலாம். எனவே வீட்டில் கார், பைக் துடைக்க, கிட்சன் மேடை துடைக்க, வீட்டை சுத்தம் செய்ய இந்த பெட்ஷீட்டுகளை கிழித்து பயன்படுத்தலாம். சூடான பாத்திரங்களை பிடிக்கும் துணியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  வீட்டில் பயன்படுத்தாத பழைய பெட்ஷீட்டுகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..! 

  செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கலாம் : வீட்டில் செல்லப்பிராணி வளர்க்கிறீர்கள் எனில் அவற்றிற்கு தரையில் படுக்க அல்லது மெத்தை இருப்பின் விரிப்பானாக பயன்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 57

  வீட்டில் பயன்படுத்தாத பழைய பெட்ஷீட்டுகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..! 

  கர்டெய்ன் : ஜன்னல் , கதவுகளுக்கு கர்டெய்னாக பயன்படுத்தலாம் அல்லது அவற்றை கோர்வையாக சேர்த்து தைத்தால் கால் மிதியாகவும் பயன்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  வீட்டில் பயன்படுத்தாத பழைய பெட்ஷீட்டுகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..! 

  தலையனை உறைகள் : பெட்ஷீட்டுகளை கட் செய்து தலையணை உறைகளாக பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது ஃபிரிட்ஜ், வாஷிங்மிஷின் மேல் விரிக்க, ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்களை மூட என பயன்படுத்தலாம். தரையில் அமரும்போது தரை விரிப்பானாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  வீட்டில் பயன்படுத்தாத பழைய பெட்ஷீட்டுகளை மீண்டும் பயன்படுத்த அருமையான யோசனை..! 

  உதவி செய்யலாம் : தெருவோரத்தில் வீடுகளின்றி இருப்பவர்கள், ஆதரவின்றி இருப்பவர்கள் பலருக்கு பெட்ஷீட் என்பது மிகப்பெரிய விஷயம். அவர்களுக்கு இந்த பழைய பெட்ஷீட்டுகளை கொடுத்து உதவலாம்.

  MORE
  GALLERIES