

தென்னை துடைப்பங்கள் மலையேறி இன்று பூந்துடைப்பங்கள்தான் டிசைன் டிசைனாக கடைகளில் விற்கப்படுகின்றன. ஏனெனில் அவைதான் டைல்ஸ் கற்களில் பெருக்குவதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால் அவற்றை வாங்கி வந்ததுமே பயன்படுத்த முடியாது. அதில் இருக்கும் புழுதி பிரிக்கும்போதே பறக்கும்.


பெருக்கினாலும் குப்பையை விட அந்த புழுதிதான் அதிகமாக வரும். இந்த புழுதியை முழுவதும் நீக்காவிட்டால் அவை வீடு முழுவதும் பெருக்கிய பிறகும் ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே அந்த புழுதியை எப்படி ஐந்தே நிமிடத்தில் நீக்குவது என்று பார்க்கலாம்.


இந்த பூந்துடைப்பமானது ஒரு வகையான காய்ந்த புல்லிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அவற்றை தயாரிக்கும்போதே ஓரளவு சுத்தம் செய்துதான் தயாரிப்பார்கள். இருப்பினும் சில அதில் ஒட்டியிருக்கும். அவை ஆடைகளில் ஒட்டிக்கொண்டாலோ, உடம்பில் பட்டாலோ சுளுசுளுவென குத்தும். எனவே அவற்றை முற்றிலும் நீக்கினால்தான் பழைய துடைப்பம் போல் எளிதாக பயன்படுத்த இயலும்.


எனவே அந்த புழுதியை நீக்க பல் துலக்கும் பிரஷ் அல்லது துணி துவைக்கும் பிரஷ் கொண்டு நன்கு தேயுங்கள். அதற்காக அதிகமாக தேய்த்து துடைப்பத்தை பிச்சி எடுத்துவிடாதீர்தள். ஓரளவு அழுத்தம் கொடுத்து தேய்க்க அவற்றில் உள்ள புழுதிகள் வெளியேறுவிடும். பின் அதை தண்ணீரில் அலசிவிடுங்கள். இதனால் எஞ்சியிருக்கும் புழுதியும் தண்ணீரில் வந்துவிடும். பிடிக்கும் இடத்தை தண்ணீரில் அலசக்கூடாது. முனையை மட்டும் அலசிவிடுங்கள்.