கோடைக்காலம் வந்துவிட்டாலே வீட்டிலும் சரி, வெளியே சென்றாலும் சரி வெயிலின் தாக்கத்தை சமாளிப்பது சற்று கடினம்தான். அதற்காக நாம் எப்போதும் ஏ.சி. , ஃபேனை போட்டு வைத்திருக்க முடியாது. கரண்டு பில் எகிறிவிடும். வாங்கும் வருமானம் கரண்ட் பில் கட்டவே சரியாக இருக்கும். எனவே வீட்டை எப்போதும் குளுமையுடன் வைத்துக்கொண்டால் இந்த பிரச்சனையே இருக்காது. எப்படி என்று கேட்கிறீர்களா..? மேலும் படியுங்கள்...
காட்டன் துணி பயன்படுத்துங்கள் : ஸ்கிரீன் துணி. சோஃபா கவர், கட்டில் மெத்தை, தலையணை என எதுவாயினும் அவற்றிற்கு காட்டன் துணிகளை பயன்படுத்துங்கள். அவை வீட்டின் குளிர்ச்சியை தக்க வைக்கும். சிந்தடிக் போன்றவை சூட்டை கிளப்பக் கூடியது. முடிந்தால் தலையணை உறைகளில் அரிசியை நிரப்பி அதை தலைக்கு வைத்துத் தூங்குவதாலும் குளுர்ச்சி கிடைக்கும்.
மொட்டை மாடியில் நீர் தெளியுங்கள் அல்லது தென்னை ஓலை பரப்புங்கள் : உங்கள் சீலிங் குளிர்ச்சியாக இருந்தால்தான் வீட்டின் வெப்பம் இறங்காது. அதற்கு அவ்வபோது மொட்டைமாடியில் தண்ணீர் தெளித்தால் சீலிங் குளிர்ச்சியாக இருக்கும். பச்சையான தென்னை ஓலைகளை மாடியில் பரப்புவதன் மூலம் நேரடியாக வெயில் வெப்பம் தாக்குவதைத் தவிர்க்கலாம். சீலிங் குளிர்ச்சியாக இருக்கும்.