வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தும் டாய்லெட்டை தூய்மையாக வைத்திருப்பது எப்போதுமே அவசியம். இந்த தொற்று நேரத்தில் பலர் புழங்கும் டாய்லெட்டை கிருமிகளின்றி வைத்திருப்பது இன்னும் முக்கியமானதாகிறது. நல்ல வாசனைமிக்க டாய்லெட்டை பயன்படுத்துவது சூழ்நிலையை மேம்படுத்தி நேர்மறையான மனநிலையை ஊக்குவிக்கிறது.
ஏனென்றால் டாய்லெட் என்பது கிருமிகளின் கூடாரம். எனவே டாய்லெட்டை சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். டெல்லியை சேர்ந்த பொது மருத்துவர் அஜ்மானி டாய்லெட் கறை மற்றும் நாற்றத்தின் பின்னால் உள்ள அறிவியலையும், மிகவும் பொதுவான 2 சிக்கல்களை தடுக்கக்கூடிய நுட்பத்தையும் சரி செய்ய எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய சில உண்மைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
உங்கள் டாய்லெட்டில் இருக்கும் நீண்ட நாள் அழுக்கு கறைகள். இவை சுண்ணாம்பு போன்ற தோற்றத்துடன் கூடிய கடின கறைகளாக உங்கள் டாய்லெட்டில் படிபவை. இது முக்கியமாக கால்சியம் கார்பனேட்டைக் கொண்டுள்ளது. கடின நீர் (Hard water ) கறைகளை சுண்ணாம்பு வெள்ளை எச்சங்கள் என்றும் குறிப்பிடலாம். இவை குழாய்கள் மற்றும் நீர் முனைகளை (water nozzles) சுற்றி படலமாக படிகின்றன. இதற்கு காரணம் நீரில் அதிகப்படியான தாதுக்கள் இருப்பதே. அதிக தாதுப்பொருள் கொண்ட நீர் காலப்போக்கில் குழாய்கள், ஷவர், சிங்க், டாய்லெட்கள் ஆகியவற்றின் மீது அகற்றுவதற்கு மிகவும் கடினமான துரு மற்றும் கறைகளை ஏற்படுத்தும்.
கடினமான நீர் கறைகளுக்கு பின்னால் உள்ள அறிவியல் : ஒரு ஹைட்ரோபோபிக் (hydrophobic) மேற்பரப்பு எடுத்துக்காட்டாக நீர் ஒட்டாத மேற்பரப்பு என்பது ஈரப்பதத்திற்கு எதிரான சக்தி கொண்டது. ஈரப்பதம் கொண்ட டச் பாயிண்ட்களின் நீர் தொடர்பு 90 டிகிரி கோணத்தை தாண்டும் போது அதன் மேற்பரப்பை ஹைட்ரோபோபிக் அல்லது ஆன்டி-ஸ்டிக் என வகைப்படுத்துகிறோம்.
அதற்கு மாறாக நீரை வலுவாக ஈர்த்து வைத்திருக்கும் தன்மை கொண்ட ஹைட்ரோஃபிலிக் (hydrophilic) மேற்பரப்புகள் ஈரமான மேற்பரப்புடன் காணப்படுகின்றன. ஹைட்ரோஃபிலிக் மேற்பரப்பானது 90 டிகிரிக்கும் குறைவான டச் பாயிண்ட்களின் கோண அளவீட்டைக் கொண்டுள்ளன. இந்த மேற்பரப்புகளில் தான் நீர் நீண்ட காலத்திற்கு தங்கியிருந்து அழுக்கு மற்றும் கடினமான கறையாக மாற்றப்படுகிறது.
கடினமான நீர் கறைகளை தடுக்க என்ன செய்யலாம்? : கடினமான நீர் கறைகளை போக்க பேக்கிங் சோடா மற்றும் வினிகர், போராக்ஸ் மற்றும் வினிகர் பேஸ்ட் ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கிய எண்ணற்ற வழிகளை முயற்சித்து பார்த்தும் வெள்ளை கறைகள், மண், விரும்பத்தகாத வாசனை போன்ற சில பொதுவான கழிப்பறை பிரச்சனைகள் கழிப்பறை மேற்பரப்பில் எஞ்சியிருக்கும் தண்ணீரின் காரணமாக சில நேரங்களில் தொடரும். தாது மற்றும் அழுக்குகளை கொண்ட இந்த நீர் கறைகள் உருவாக காரணமாகவும், நுண்ணுயிரிகள் வளர்ச்சியடையும் இடமாகவும் இருக்கிறது.
கூடுதலாக எவ்வளவு கிளீன் செய்தாலும் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது தண்ணீர் படிவது மற்றும் தேங்குவதை தடுப்பதன் மூலம் அல்லது கழிப்பறை மேற்பரப்பில் ஒரு நீர் அடுக்கை விடாமல் தண்ணீரை வேகமாக வெளியேற்ற அனுமதிப்பதன் மூலம் இந்த சிக்கல்களை சமாளிக்கலாம். இந்த சிக்கலை சமாளிப்பதற்கான வழிகளில் மற்றொன்று, மேற்பரப்பில் ஹைட்ரோபோபிக் அல்லது ஆன்டி-ஸ்டிக் செய்ய உதவும் பொருட்களை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வது மேற்பரப்பில் நீர் ஒட்டுவதை தடுத்து கடின கறைகள் உருவாவது குறைக்கப்படுகிறது.