எல்லோர் வீடுகளிலும் மின்விசிறிகள் உண்டு. ஏர் கூலர், ஏசி வாங்க முடியாத சிலருக்கு கோடைக் காலத்திலும் மின்விசிறிதான் கைக்கொடுக்கிறது. ஆனால் குளிர்காலத்தில் மின்விசிறி இயல்பான வேகத்தில் இயங்கும். அந்த சமயத்தில் அந்த வேகம் போதுமானதாக இருக்கும். சில நேரங்களில் மின் விசிறியை பயன்படுத்தக்கூட மாட்டோம். ஆனால் கோடைக்காலம் வந்துவிட்டால் ஒரு நிமிடம் கூட மின்விசிறியின்றி இருக்க முடியாது.
கொளுத்தும் வெயிலுக்கு எப்போதும் சுற்றும் மின்விசிறியின் வேகம் குறைவாக இருப்பதை உணரலாம். அப்போதுதான் மின்விசிறி வேகம் குறைந்திருப்பதையே நாம் கவனிப்போம். ஏ.சி இல்லாத வீடுகளுக்கு இது பெரும் சிரமத்தை உண்டாக்கலாம். இதனால் சிலர் புது ஃபேன் கூட வாங்க முயற்சி செய்வார்கள். ஆனால் அவ்வளவெல்லாம் நீங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. வெறும் 70 ரூபாய் இருந்தால் போதும்.. எப்படி என மேலும் படியுங்கள்..!
மின்தேக்கியை மாற்றுவது அவ்வளவு கடினம் அல்ல. அதை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். இது விசிறி மோட்டருக்கு மேலே இருக்கும். பழைய மின்தேக்கியை அகற்றும் போது... அதன் கம்பிகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் கவனியுங்கள். சரியாக அதே வழியில்.. புதிய மின்தேக்கியை அமைக்கலாம். அதன் பிறகு மின்விசிறியை ஆன் செய்தால்.. அது சூப்பர் ஸ்பீடில் சுழல்வதை கவனிக்கலாம்.