Tips to remove odour from your refrigerator | குளிர்சாதனப் பெட்டி வீடுகளில் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. கிராமங்களில் இருப்பவர்கள் கூட தற்போது ஃப்ரிட்ஜை உபயோகிக்க ஆரமித்துவிட்டனர். எவ்வளவு நாள் ஆனாலும் காய்கறிகளை கெடாமல் இது பாதுகாக்கிறது. பெரும்பாலானோர் பிரிட்ஜை திறந்தாலே துர்நாற்றம் வீசும். ஆனால், அதை எப்படி சரி செய்வது என நம்மில் பலருக்கும் தெரியாது. குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வரும் துர்நாற்றத்தை நீக்குவதற்கான சில எளிய வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
தோசை மாவு அதிகமாக துர்நாற்றம் வீசக் கூடிய பொருள். ஏனெனில் மாவு புளிக்கும் போது புளித்த துர்நாற்றம் அதிகமாக வீசும்.எனவே, அதை எப்போதும் மூடி உள்ள பாத்திரத்தில் வைக்கவும். முடிந்த அளவு தோசை மாவிற்கு என்று தனி டப்பாக்கள் பயன்படுத்துங்கள். அதே போல, பனீர், சீஸ், சாஸ் போன்றவற்றை அலுமினிய பேப்பரில் சுற்றி வையுங்கள். இதுவும் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
காஃபி இயற்கையாகவே நறுமணத்தை தரக் கூடியது. எனவே, பிரிட்ஜ் துர்நாற்றத்தை நீக்க காபி பொடியை பயன்படுத்தலாம். சிட்ரஸ் அமிலம் பிரிட்ஜிற்கு புத்துணர்ச்சியான நறுமணத்தை கொடுக்கும். எனவே, காட்டன் பஞ்சை எடுத்து, அதை லெமன் ஜூஸில் நனைத்து பிரிட்ஜ் உட்புற மூலையில் வைக்கவும். இதனால், பிரிட்ஜ் துர்நாற்றம் நீங்குவதோடு, உங்க பிரிட்ஜ் பளபளப்பாக இருக்கும்.